ஜனவரி 31, 2019

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி வரை நீடித்துள்ளதாக

ஜனவரி 31, 2019

நாராஹேன்பிட இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்பாக சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனவரி 31, 2019

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியுள்ளது.

ஜனவரி 31, 2019

தொல்பொருள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் எடுத்த புகைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டுள்ள பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் புதன்கிழமை 30

ஜனவரி 31, 2019

தற்போது நடைமுறையில் இருப்பது தேசிய அரசாங்கம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனவரி 31, 2019

தரம் 6க்கு மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்வதற்காக வேண்டி 5000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் ஹொரோப்பொத்தான பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை

ஜனவரி 31, 2019

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையிலான போட்டித் தொடரை தீர்மானிக்கும் 5ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்

ஜனவரி 30, 2019

கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு; கடற்படை கைது நடவடிக்கையின்போது ஆற்றில் குதித்த இரண்டாமவரான

அஸ்ஸலாமு அலைக்கும்.

2019.01.14 திங்கட்கிழமை அன்று சிலாபம், ஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் கடந்த வருடங்களில் A/L, O/L, scholarship மற்றும் அஹதியா பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும்,2019ம் ஆண்டில் 1ம் தரத்துக்கு தெரிவு செய்யப்பட்ட எமது ஊரை சேர்ந்த முஸ்லிம், சிங்கள மாணவர்களுக்கும் சங்குத்தடான் மாணவர்களுக்கும் தேவையான புத்தகப்பை, கற்றல் உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.












M.H.M. Bisri
செயலாளர்
ஜயபிம உதவும் கரங்கள்

நேற்று ஆளுநர் செயலகத்தில் பட்டதாரி (Bachelor of Education) ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார் .

அன்மையில் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி நியமனம் வழங்கப்படாதிருந்த  நிலையில் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் விஷேட பணிப்புரைக்கு அமைய மீண்டும் தகுதி அடிப்படையில் சுமார் 19 B.Ed பட்டதாரிகளுக்கு இன்று ஆளுநர் செயலகத்தில் ஆசிரியர்  நிரந்தர நியமன   கடிதங்களை கிழக்கு ஆளுநர் வழங்கி  வைத்தார்

இந்த 19 நியமனத்தில் 18 தமிழ் பட்டதாரிகளும் ஒரு சிங்கள பட்டதாரியும் உள்வாங்கப்பட்டாதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின் மாவட்டத்தில் வழங்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.


நெத்தலிப் பயல் = கௌரவ ஆளுநர்
================================


மஹ்மூத் லெப்பை ஆலிம் முஹம்மது ஹிஸ்புல்லாஹ்

இன்று இந்தப் பெயரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

பாராளுமன்ற உறுப்பினராய்....
பிரதி அமைச்சராய்....
மாகாண சபை உறுப்பினராய்...
மாகாண அமைச்சராய்...
இராஜாங்க அமைச்சராய்...
கேபினெட் அமைச்சராய்....
இன்று ஆளுநராய் ....

இப்படிப் பரிணாமம் அடைந்திருக்கும் இந்த நபரை, இவரின் திறமையைச் சிலாகிக்காதவர்கள் மிகவும் சிலரே....

மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மரணிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் ஒலுவில் துறைமுக மஹாபொல பயிற்சிக் கூடத்தில் தமிழ் சகோதரர்கள் சிலருக்கு துறைமுகத்தில் நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது  இப்படிக் குறிப்பிட்டார்..

அன்று நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் போட்டியிடுவதற்கு நபர்களை தேடி அலைந்த காலம் இருந்தது....

அன்றும் அப்படித்தான் காத்தான்குடிப் பள்ளிவாசலில் தொழுகையை முடித்த பின்னர் இந்தக் கட்சியின் அவசியம் பற்றி உரையாற்றிவிட்டு இந்தக் கட்சியில் இணைந்து பணியாற்றவும் வேட்பாளர்களாகக் களமிறங்கவும் தனவந்தர்கள்,படித்தவர்கள்,செல்வாக்குமிக்கவர்கள் முன்வாருங்கள் என அழைப்பு விடுத்து விட்டு வெளியில் வந்தோம்...

யாருமே முன்வரவில்லை.

பள்ளிக்கு வெளியில் வந்ததும் ஒரு பொடியன் வந்தான்...

ஆளப்பாத்தா....வெள்ளயா ...நல்ல ஒல்லியா ....ஒரு நெத்தலிப்பயல்...

சேர் நான் தயார்....என்றான் ....

பேர் என்ன வாப்பா உண்ட...

ஹிஸ்புல்லாஹ் எண்டான்...

அன்று தலைவர் அந்தநெத்தலிப்பயல் ஹிஸ்புல்லாஹ்வின் கரங்களைப்  பற்றி மட்டக்களப்பு முஸ்லிம்களுக்கு சொன்னார்...

அல்லாஹ்வைப் புகழ்ந்து கண்மணிநாயகம் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ....

எதிர்கால மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் தலைமை இந்த ஹிஸ்புல்லாஹ் தான் ...என்று ..

அல்லாஹ் அதனைக் கபூல்  கொண்டான்.....

இப்படி அவரது உரை நீள்கிறது....

அன்று தலைவர் அவர்கள் சொன்ன நெத்தலிப்பயல்தான் இன்றய கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் கௌரவ எம்.எல் ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்...

ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அரசியல் மீது எனக்கு உடன்பாடில்லை...அது எனது சொந்தக் கருத்து.அவரது இந்த ஆற்றல் அவரது தாய்க்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லீம் முஸ்லீம் காங்கிரசின் வியாபகத்துக்குப் பயன்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி எனும் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்கள் அந்தக் கொள்கையை ஏன் விட்டொழிந்தார்கள் எனும் கேள்விக்கு அவர் மாத்திரமல்ல அவரைப் போல அரசியல் செய்ய வெளியேறியவர்கள் எவருமே  இன்று வரை சரியான விடை தரவில்லை.

எல்லோருமே தலைவர்கள் என்றால் எப்படி...?

இவைகளுக்கு அப்பால் இன்றய அரசியல் சூழலில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் அரசியல் பின்புலம் குறித்து அவதானத்தைச் செலுத்தாமல் பெயரளவிலேனும் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநராய் ஒரு முஸ்லீம் நியமிக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமானது.

தமிழ்த் தேசிய அரசியலின் அதிகாரப்பகிர்வு அலகாக  இணைந்த வடகிழக்கு மீதான அதீதமான விருப்பும் அழுங்குப்பிடியும் இருக்கும் நிலையில் கௌரவ ஆளுநர் அவர்களின் நியமனம் அரசியல்ரீதியான பயனை முஸ்லிம்களுக்கு அளிக்கவல்லது.

அந்தவகையில் கௌரவ ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நியமனம் வரவேற்கக்கூடியதே.

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அரசியல் காலத்தில் சோம்பல் ,விரக்தி போன்ற பலவீனங்களுக்கு  அப்பாற்ப்பட்ட அரசியல்வாதி..

சதுரங்கத்தில் காய் நகர்த்துவதில் படுகெட்டிக்காரன்..

தனது இலக்கை அடைவதற்கான பாதை வகுப்பதில், அதற்க்கான சந்தர்ப்பங்களை ,வாய்ப்புக்களை உருவாக்குவதில் அவருக்கு நிகர் அவரே...

பொதுத்தேர்தலில் தோற்கிறார்....

தோற்ற கையோடு தேசியப்பட்டியல் பெறுகிறார்....

தேசியப்பட்டியல் எடுத்த கையோடு இராஜாங்க அமைச்சராகிறார்...

இது இவ்வளவும் ஒரு தேசியக் கட்சியில்...

காத்தான்குடியில் அவர் பெறும்  சுமார் 30000 கும் குறைவான வாக்குகளுக்கு சொந்தக்காரன்....

இதே இடத்தில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வை நினைத்துப்பாருங்கள்...

ஹிஸ்புல்லாஹ் எங்கே நிற்கிறார் எனப் புரியும்....

ஐவேளையும் தொழக்கூடிய எந்த ஒரு சமாச்சாரமும் அற்றவர் எனப் பெயர் வாங்கிய அரசியல் வாதி...

இஸ்லாமிய மறப்புரிமைகளின்  மீது பற்றுக் கொண்ட சிந்தனையாளன்...

இவைகளை எல்லாம் செயலில் நிரூபித்துக் காட்டிய ஒருவர்...

காத்தான்குடியின் இன்றய அதன் இஸ்லாமிய பாரம்பரியத்தின் மணத்துக்குச்  சொந்தக்காரர்...

உதுமானிய பேரரசின் உத்தியோகபூர்வ இலச்சினையை நடு ஊருக்குள் வைத்திருக்கும் ஒருவர்...

காத்தான்குடியை மதீனத்துல் கஹ்தான் என அறிமுகப்படுத்தியவர்....

காத்தான்குடி அடிக்கடி இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள் வேண்டுமென்றே வலிந்திழுக்கப்பட்டு விமர்சிக்கப்படும் நிலைமை இருந்து வருகின்றபோதும் துணிவாக இஸ்லாமிய பாரம்பரியத்தை காட்சிக்குட்படுத்தி வரும் ஒருவர்....

பாதைகளுக்கான அரபுப்பெயப்பலகை வைத்த விடயம் பாராளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்டபொழுது அவர் அளித்த பதில் என்னை மிகவும் கவர்ந்தது.

அதிகமான அரேபிய சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக காத்தான்குடி இருப்பதாலே தான் அவ்வாறு செய்ததாக அவர் குறிப்பிட்ட பொழுது அவரது சமயோசிதத்தை பாராட்டிக் கொண்டேன்...

தலைவர் அஷ்ரப் அவர்களின் மோதிரக்கை குட்டிய அந்த நெத்தலிப்பயல் இன்று கிழக்கின் கௌரவ ஆளுநராக வந்திருப்பதால் ஒரு முஸ்லீம் என்ற அடிப்படையில் சந்தோஷப்படுகிறேன்.

ரனூஸ் முஹம்மத் இஸ்மாயில்,
முன்னாள் சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர்


தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது. 

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல இது குறித்த தெரிவிக்கையில், இது தொடர்பில் தற்போது காணப்படும் சட்டதிட்டங்கள் போதுமானதாகவில்லை என அவர் குறிப்பிட்டார். 

அது தொடர்பான குற்றங்கள் தொடர்பான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். தொல்பொருள் பெறுமதி கொண்ட இடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதனை பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)



மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ்.சாலி வழங்கிய உத்தரவின் பேரில், கொழும்பு மாநகர சபையில் (சி.எம்.சி) இல் பணிபுரியும் 62  அமைய  ஊழியர்கள் பெப்ரவரி 01 ஆந் திகதியிலிருந்து நிரந்தரமாக்கப்படவுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையில் வடிகாலமைப்பு பிரிவுக்கு இணைக்கப்பட்டிருந்த இந்த ஊழியர்கள் நீண்டகாலமாக  அமைய அடிப்படையில் பணிபுரிந்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார். "அவர்களின் தொடர்ச்சியான மற்றும் திறமையான சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு அடுத்த மாதம் முதல் அவர்களின் நிரந்தரத்தை உறுதிப்படுத்தியுள்ளேன்," என்று  ஆளுநர் கூறியுள்ளார்.


ஜனவரி 29, 2019

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவது தொடர்பில் பங்களாதேஷ் பிரஜைகள் ஐந்து பேர் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக

ஜனவரி 29, 2019

கிண்ணியாவில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது ஆற்றில்


பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்காக வௌியிடப்பட்ட சுற்றரிக்கையை இரத்து செய்ய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார். 

கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 

பெற்றோர்களிடம் இருந்து பாடசாலை நடவடிக்கைகளுக்காக பணம் சேகரிக்கப்படுவதை தடுப்பதற்காக அண்மையில் சுற்றரிக்கை ஒன்று வௌியிடப்பட்டது.

(AdaDerana)

ஜனவரி 29, 2019

முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அவருக்கு எதிரான வழக்கொன்றில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

ஜனவரி 29, 2019

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளை அடுத்து சந்யா எக்னளிகொட அவர்கள் தேரருக்கு அவ்வாறு பொது மன்னிப்பு வழங்குவதற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனவரி 28, 2019

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஜனவரி 28, 2019

ஸ்ரீ லங்கன் விமான சேவையை மீள கட்டமைப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் கொண்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது


ஒரு பிரதேச செயலகத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சம்பந்தமான கடமைகளை மேற்கொள்வதற்கு ஐந்து அதிகாரிகள் இருக்கிறார்கள்.

பிரதேசத்தில் இருக்கும் பாடசாலைகள்,சிறுவர் பராமாரிப்பு நிலையங்கள்,பாலர் பாடசாலைகள்,மகளிர்  சங்கங்கள்
என்று மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் சம்பந்தப்படும் எல்லா இடங்களிலும் இந்த அதிகாரிகளின் சேவைகள் வழங்கப்படும்.

இலங்கையைப் பொறுத்தவரையில்
வட கிழக்கை தவிர்த்து நோக்கினால் ஏனைய மாகணங்கள் அனைத்திலும் இந்தப் பதவிகளில்
சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்ட
அதிகாரிகளே கடமையில் அமர்த்ப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களினால்  வழங்கப்பட வேண்டிய சேவைகள்
தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கோ, தமிழ் பேசும் சமூகத்துக்கோ முழுமையாக சென்றடைவதில்லை.

இந்த அதிகாரிகளுக்கும்
தமிழ் பேசும் சமூகத்துக்கும்
இருக்கும் மொழிரீதியான தடை காரணமாக,
ஒரு அரச அதிகாரியினால் சகல மக்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் சிங்கள சமூகத்துக்கு மட்டுமே சென்றடைகின்றன.

இதனால் அரசு வழங்கும் அதிகமான சேவைகள்
உதவிகள் தமிழ் சமூகத்தை சென்றடைவதில்லை.

குறைந்த பட்சம் மக்களோடு,  மாணவர்களோடு நேரடியாக சம்பந்தப்படும் அரச பதவிகளுக்கேனும்
தமிழ் மொழியில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் குறித்து தமிழ் பேசும் அரசியல் வாதிகள், அரச அதிகாரிகள் கூடுதல் கவனம்
செலுத்தி அரச வழங்கள் மற்றும் சேவைகள்
அனைத்தும் தமிழ் பேசும் சமூகத்துக்கும் முழுமையாக சென்றடையச் செய்ய வேண்டும்.

(Safwan Basheer)

என்றாவது ஓரு  நாள்
ஊருக்குள் –  ஓர்  ஆலமரமாய்
வளர  வேண்டும்
பெருமைக்காக  அல்ல,
பேராசைக்காக  அல்ல,
என்   நிழல்  –  அடுத்தவர்க்கும்
பயனாக  அமைய  வேண்டும்
என்பதற்காக. . .
ஏனெனில்,
ஒரு காலம் . . .
நானும்  –  ஏனையோரின்
நிழலின்  கீழ் வாழ்ந்தவள் தான்.

முஸ்லிம் சமூகம் இன்று எரிமலைக்கு மேல் உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் காணப்படுவதாகவும் இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு எமது சமூகத்துக்குள் உள்ள சகல அமைப்புக்களும் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைவதே ஒரே வழியாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ள அஷ்ஷெய்க் எம்.எம். முஹம்மத் நளீமியை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (27) கஹட்டோவிட்டாவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குறுகிய வேறுபாடுகளையும், கருத்து முரண்பாடுகளையும் மறந்து சமூக அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். நாம் பிரிந்து செயற்படும் போது எம்மை நோக்கி வருகின்ற  ஆபத்துக்களின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.
இந்த நாட்டில் உயர் பதவிகள் சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்ட ஒன்று அல்ல. நல்ல பண்பாடுகளை வெளிப்படுத்தினால் அவற்றை நாம் அடைந்து கொள்ளலாம். கஹட்டோவிட்ட சகோதரர் முஹம்மதுக்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக வர முடியுமாக உள்ளமை இதற்கு சிறந்த சான்றாகும் எனவும் அவர் மேலும் கூறினார். 

ஜனவரி 28, 2019

அனைத்து வீடுகளிலும், வியாபார நிலையங்களிலும், அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களிலும், வாகனங்களிலும் தேசிய கொடியினை காட்சிப்படுத்தி சுதந்திர தினத்தினை

ஜனவரி 28, 2019

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் வெளிநாடுகளில் பணி புரியும் ஊழியர்களுக்கும் விசேட கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க

ஜனவரி 28, 2019

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

ஜனவரி 28, 2019

போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு கண்டிப்பாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடத்தா விட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

(AdaDerana)

:
ஜனாதிபதி, கோத்தாபய கொலை சதி; கைதான இந்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, வாக்குமூலம் வழங்க விமல் வீரவங்ச எம்.பி. CID யில் முன்னிலை.

ජනාධිපති, ගෝඨාභය ඝාතන කුමන්ත්‍රණ; ඉන්දීය ජාතිකයා හෙළි කළ කරුණු සම්බන්ධයෙන් ප්‍රකාශයක් ලබාදීමට පා.ම. විමල් වීරවංශ CID' ට පැමිණෙයි.

புதிய அரபுக்கல்லூரிகள்  தடையும் முஸ்லீம் புத்திஜீவிதத்துவமும் - ஜுனைட் நளீமி


நாட்டில் புதிதாக அரபுக்கல்லூரிகள் நிறுவுவது நிறுத்தப்படுவதுடன் இருக்கின்ற அரபுக்கல்லூரிகளை வளப்படுத்துவதற்கான ஆலோசனையை தபால் சேவைகள்  மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ ஹலீம் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என்ற செய்தி பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டுள்ளதை அவதானிக்க  கூடியதாக  உள்ளது. குறித்த விடயம் தொடர்பான ஆழ்ந்த புலமை இல்லாதவர்களும் உலமாக்களை  முல்லாக்கள் என்று வசைபாடுபவர்களும் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முனைபவர்களும் தமது தனிப்பட்ட இலாபங்களுக்காக கருத்துக்களை கூறிவருகின்றவேளை புத்திஜீவிகளது மௌனம் கவலையளிக்கின்றதாக உள்ளது. கௌரவ அமைச்சரின் கருத்தினை கவனமாக உற்றுநோக்குகின்றபோது காலத்திற்க்கு தேவையான விடயத்தை சமூக நலன் கருதி குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இலங்கை இஸ்லாமிய கல்வி கலாச்சார பாரம்பரிய வளர்ச்சியும், தற்போது  இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆழ்ந்து ஆராயும்போது அரபுக்கல்லூரிகளது வகிபாகம் மிகவும் தொடர்புபட்டதாக காணப்படுவது வெளிப்படையான உண்மையாகும்.
இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களின் சந்தேகப்பார்வைக்குள் சிக்கித்தவிப்பதற்கும் இஸ்லாம் இலங்கையில் வளர்ச்சியடையாமைக்கும் அரபுக்கல்லூரிகளும் அதில் வெளியாகிய உலமாக்களும் முக்கிய காரணியாக அமைந்துள்ளமை மறுக்க முடியாத  உண்மை. இலங்கையில் நிர்வாகத்துறையில், மருத்துவத்துறையில், கல்வித்துறையில், தொழிற்துறையில்,  அறிவியல்; துறையில் என அனைத்து துறைகளிலும் முஸ்லிம் புத்திஜீவித்துவ நிபுணர்களின் வெற்றிடம் நிலவுவதாக கூறிக்கொள்ளும் நாம், கல்வித்துரையில்; பேராசிரியர்களையும் கலாநிதிகளையும் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களையும் குறை நிறப்பு செய்யமுடியாமல் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் இடர் நிலைக்கு அரபுக்கல்லூரிகளும் உலமாக்களும் வகை சொல்லியே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டு. குறைந்தது இஸ்லாமிய ஷரியா கல்வியில் நிலவுகின்ற தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், ஏனைய கலைகள் மீதான ஆழ்ந்த புலமைகொண்ட உலமாக்களின் தேவைப்பாட்டுக்கு அரபுக்கல்லூரிகளின் வகிபாகம் கேள்விக்குற்படுத்தவேண்டியும் உள்ளது. குறித்த விடயம் தொடர்பாக நோக்குகின்றபோது இலங்கை போன்ற முஸ்லீம் சிறுபான்மையாக வாழும் நாட்டில் அரபுக்கல்லூரிகள் தொடர்பாகவும் அதன் பாடத்திட்டங்கள் தொடர்பாகவும் மீள்பரிசீலனை செய்யவேண்டிய பொறுப்பு முஸ்லீம் புத்திஜீவிகளுக்கு உள்ளதுபோன்று முஸ்லீம் விவகார அமைச்சருக்கும் உள்ளதென்பதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும். குறித்த அமைச்சரின் கருத்து தொடர்பில் பின்வரும் அம்சங்களை நோக்கும்போது அவரது கருத்தியல் வெளியில் மறைந்துகிடக்கும் உண்மைகள் பலவற்றினை கண்டுகொள்ள முடியும்.

அரபுக்கல்லூரிகளும் பௌதீக வளங்களும்.
அரபுக்கல்லூரிகளைப்பொறுத்தவரையில் இலங்கை முஸ்லீம் ஷரியா கல்விப்பாரம்பரியத்தில் மிக முக்கிய வகிபாகத்தினை ஆரம்ப காலங்களில் வகித்தது. இஸ்லாமிய கற்கை நெறி என்பது பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட சில அரபுக்கல்லூரிகளினூடாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. காலி பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யா, மஹரகமை கபூரிய்யா, கிழக்கிலங்கை சர்க்கிய்யா, காத்தான்குடி பலாஹ் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய அரபுக்கலாசாலைகள் நாட்டில் காணப்பட்டாலும் போதிய வளங்களை கொண்டு இஸ்த்தாபிக்கப்பட்டிருந்தன. போதிய கல்வி செயற்பாட்டுக்குரிய பௌதீக வளங்கள், தங்கு தடையின்றிய வருமான ஏற்பாடு, பயிற்றப்பட்ட போதனாசிரியர்கள் என தன்னிறைவு பெற்ற வளாகங்களாக காணப்பட்டது.

விமர்சனங்களுக்கப்பால் இக்கல்லூரிகளில் வெளியாகிய உலமாக்களுக்கென சமூக மட்டத்தில் தனி இடமும் காணப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மறுதலையை நோக்கி செல்வதனை அவதானிக்க முடிகின்றது.
அதிகரித்துவரும் வேலையில்லா பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியாத உலமாக்கள் பலர் தொழில் சந்தையில் புதிய அரபுக்கல்லூரிகளை உருவாக்குவதுதான் தீர்வு என கருதுவதனையும் குறிப்பிடமுடியும். அண்மையில் பதிவிற்காக வந்த சில அரபுக்கல்லூரிகளை அவதானிக்கின்றபோது இந்த உண்மையை விளங்கிக்கொள்ள முடியும். வெறுமனே 20அடி அகலம், 40அடி நீளம்  கொண்ட தகர கொட்டிலில்  அமையப்பெற்ற  அரபுக்கல்லூரி பதிவிற்காக ஆவணங்களை சமர்ப்பித்து இருந்தது. குறித்த கல்லூரி தகரத்தினால் அமையப்பெற்றிருந்தது. இத்தகர  கொட்டகையில் குரான் மத்ரஸா வகுப்புக்கள், மனன பிரிவு, கிதாப் பிரிவு, வளர்ந்தோருக்கான குரான் வகுப்பு, மற்றும் வாராந்த பயான் வகுப்புக்கள் இடம்பெறுவதாக குறிப்பிட்ட அதிபர் விரைவில் அஹதிய்யா வகுப்பினையும் ஆரம்பிக்க உள்ளதாக குறிப்பிட்டார். 122 மாணவர்களைக்கொண்டு இயங்கிவரும் இவ்வரபு கல்லூரிக்கு ஒரு மலசலகூடம் காணப்பட்டது.

உண்மையில் இங்கு கற்கும் அதிகமான மாணவர்கள் பெண்களாக காணப்பட்டனர். உஷ்ணப்பிரதேசமான இக்கல்லூரி அமைந்துள்ள பகுதியில் மாணவர்களின் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான அம்சங்கள் எவ்வாறு இருக்கும் என்பதனை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இதேபோன்று இன்னுமொரு மனனபீடத்தில் பெண்மாணவிகள் உஷ்ணம் தாங்கமுடியாமல் அடிக்கடி வகுப்பினைவிட்டும் வெளியில் சென்று தமது ஆடைகளை நனைத்துக்கொண்டு வந்து காயும்வரை வகுப்பினை தொடர்வதும்  காய்ந்தபின் மீண்டும் நனைத்துக்கொண்டு வருவதுமென  நிலைமை கவலையை தோற்றுவித்துள்ளன.

பிறிதொரு அரபுக்கல்லூரியினை சென்று பார்வையிட்டபோது சமைத்தல், சாப்பிடுதல் தூங்குதல் என்பன ஒரே தகர அறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதனை காணமுடிந்தது. உடுத்த உடுப்புகளை கொழுவி வைப்பதற்குக்கூட வசதி இல்லாமல் வியர்வையுடன் பெட்டியில் அமுக்கி வைக்கின்ற நிலைமைகள் ஏராளம்.
மற்றுமொரு பெயர்பெற்ற அரபுக்கல்லூரியினை பார்வையிட்டபோது மாணவர் தூங்கும் அறையை ஒட்டிய அறையில் பழைய சாமான்களை சேமிக்கும் களஞ்சியமாக பாவிப்பதுடன் துர்நாற்றம் வீசும் அளவு குப்பை கூலமாக  காணப்பட்டது.
சில அரபுக்கல்லூரிகள் தனியார் வீடுகளில் , கட்டடங்களில், பள்ளிவாசல்களில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த ஒப்பந்த காலம் முடியும் நிலையில் அல்லது பள்ளிவாசல் நிருவாகிகளுடனான முரன்பட்டினால் மூடுவிழாக்கொண்டாடப்பட்டு மாணவர்கள் வீதிக்கு வந்த வரலாறுகள் ஏராளம்.

கல்விச்செயற்பாடு
பொதுவாக பழமையான அரபுக்கல்லூரிகள் தவிர்ந்து சில புதிய அரபுக்கல்லூரிகளையும் விடுத்து ஏனைய புதிய பல அரபுக்கல்லூரிகள் கல்விச்செயற்பாட்டுக்கும், புரக்கீர்த்தி நடவடிக்கைக்கும் உரிய போதிய பௌதீக வளங்களை கொண்டிருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பிரபலமான நீண்ட வரலாற்றைக்கொண்ட ஒரு அரபுக்கல்லூரியில் வாசிகசாலைக்கென ஒதுக்கப்பட்ட அறையில் புத்தகங்கள் அலுமாரிகளில் வைத்து பூட்டப்பட்டு மாணவர்களுக்கான வகுப்பொன்று அதில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மற்றுமொரு அரபுக்கல்லூரியில் அழகான வாசிகசாலை அமைப்பும் புத்தகங்களும் காணப்பட்டபோதும் ஒருவருடத்திற்கு மேலாக அது மாணவர் பாவனைக்கு திறக்கப்படவில்லை என்ற தகவல் தெரியவந்தது. புதிதாக திறக்கப்பட்டுள்ள பல அரபுக்கல்லூரிகளில் வாசிகசாலை என்றால் என்ன என்று முகத்தை பார்க்கும் நிலை காணப்படுகின்றது. வாசிகசாலை உள்ள அரபுக்கல்லூரிகள் பலவற்றில் அரபு தவிர்ந்த ஏனைய மொழி நூற்கள் காண்பதற்கும் இல்லாமல் காணப்படுகின்றது.

இதுதவிர பல அரபுக்கல்லூரிகளில் மாணவர்களின் தேகாரோக்கிய விளையாட்டுக்களுக்கான எவ்வித ஏற்பாடுகளும் காணப்படவில்லை. மைதானம் என்பது அவர்களுக்கு தேவையற்ற ஒன்று என்ற மனநிலையில் இவ்வரபுக்கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன என எண்ணத்தோன்றும்.
சில அரபுக்கல்லூரிகளில் மாணவர்கள் தேசிய போட்டிகளில், இஸ்லாமிய கல்விசார் பரீட்ச்சைகளில் தோற்றுவதற்கு எச்சந்தர்ப்பமும் அளிக்கப்படுவதில்லை.

அதுமாத்திரமன்றி பல அரபுக்கல்லூரிகள் பாடசாலை பாடவிதானத்தை கற்பிக்காமல் வெறுமனே ஷரியா கல்வியை மாத்திரமே வழங்கிவருவது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக அமைந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம் மாணவ மாணவிகள் பாடசாலைக்கல்வியை விட்டும் தூரப்படுத்தும் செயல்திட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு குறித்த பிரதேச முஸ்லிம் பாடசாலைகள் மூடுவிழாவினை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உளவியல் பிரச்சினைகொண்ட உலமா சமூக உருவாக்கம்.
மாணவர்களின் உளவியல் ரீதியான தேவைகளுக்கு போதிய வளங்களை தீர்வாக வழங்க புதிய பல அரபுக்கல்லூரிகள் தவறிவிட்டுள்ளமை உளவியல் ரீதியில் தாக்கமடைந்த உலமாக்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. கற்பதற்கான குறைந்தபட்ச வகுப்பறை இட ஒதுக்கீடு, விளையாட்டு துறை, நடப்பு விவகாரங்களை தெரிந்துகொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படாமை என்பவற்றுடன் கல்லூரி வலாக்கத்தில் அவர்களது சுதந்திர செயற்பாட்டை முடக்கும்; வகையில் பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் குறித்த ஒரு அரபுக்கல்லூரிக்கு விஜயம் செய்தபோது மாணவர் தூங்கு விடுதி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டிருந்தது. தமது வீடுகளில் படுக்கையறைகளில் கேமராக்களை பொறுத்த ஆட்சேபனை கொண்டுள்ள நாம் மாணவர்களின் படுக்கை அறைவரை  கண்காணிப்பு கமரா பொருத்துவது எத்தகைய ஷரிய்யத் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அமைந்துள்ளது என்று சிந்திக்க தோன்றும். 

தொழில் சந்தையும் அரபுக்கல்லூரிகளும். 
இலங்கையில் சுமார் 300க்குமேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரபுக்கல்லூரிகளும் அதைவிட கூடுதலான எண்ணிக்கை கொண்ட பதியப்படாத (பல்வேறு காரணங்களுக்காக) கல்லூரிகளும் காணப்படுகின்றன. வருடத்தில் சராசரியாக 20 உலமாக்கள் ஒவ்வொரு அரபுக்கல்லூரிகளில் இருந்தும் வெளியேற்றப்படுகிறார்கள். எனவே சுமார் 6000 உலமாக்கள் ஒவ்வொருவரிடமும் உற்பத்தி செய்யப்படுகின்றார்கள். இவர்களில் 5மூமானவர்கள் அரச தனியார் துறைகளிலும் 10மூவெளிநாடுகளிலும் 5மூமானவர்கள்; பள்ளிவாசால்கள் மற்றும் அரபுகலாசாலைகள், குரான் மதரஸாக்களில் தொழில்வாய்ப்பினை பேருக்கொள்கின்றனர். ஏனைய 80மூமானவர்கள் தொழில்தேடும் படையினரில் உள்வாங்கப்படுகின்றனர். இதனால் பலர் புதிய குரான் மதரஸாக்களையும் அரபுக்கல்லூரிகளையும் உருவாக்க முனைவதனை ஆய்வுமூலம் அறிய முடிகின்றது. குறிப்பாக இப்பிரிவில் 50மூமானவர்கள் அரச கல்வி மற்றும் தொழில்த்துறைசார் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ளாதவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.

குறித்த ஒரு அரபுக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டபோது கல்லூரியின் தலைவர் குறித்த பெயரில் இயங்கும் இன்னும் ஒரு கிளை அரபுக்கல்லூரிக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். அத்தோடு அவர் அக்கல்லூரியினதும்  அதிபராக கடமையாற்றுவதுடன் மூன்றாவது அரபுக்கல்லூரி ஒன்றினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதக தகவல் கிட்டியது. இதேபோன்று ஒரு மாணவி மனனப்பிரிவில் சேர்க்கப்பட்டு ஒருவருடம் கடந்த நிலையிலும் இன்னும் மனனப்பிரிவில் சேர்க்காமல் குரான் ஓதும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயமுற்பட்டபோது கல்லூரியின் அதிபர் வருடத்தில் பெரும்பாலான நாட்களை கல்லூரிக்கு வெளியில் கழிப்பதுடன் மனனப்பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உலமா தனது வீடு உள்ளிட்ட மேலும் இரண்டு மதரஸாக்களில் பணிபுரிவதினால் உரிய பாட மீட்டல்கள் இடம்பெறுவதில்லை என அறியக்கிடைத்தது. மாத்திரமன்றி பெண்கள் கல்வி பயிலும் இக்கலாசாலையில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் காணப்பட்டமை அவதானிக்க முடிந்தது.

புத்தளம் மாவட்டத்தில் ஒரு அரபுக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டபோது வருடத்தில் ஆறுமாதம் கல்வி; செயற்பாட்டிலும் ஆறுமாதம் கல்லூரிக்கான நிதி வசூலிலும் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அவதானிக்க முடிந்தது. இத்தகைய வெறுமனே  பொருளாதார இலக்குகொண்ட கற்பித்தல்  செயற்பாடு  அமானிதமாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு தலைமுறையை சீரழிப்பதாக அமைந்துவிடுகிறது.

நிதித்துறை சார் நடவடிக்கைகள்.
சில அரபுக்கல்லூரிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதி உதவிகளை பெற்றுக்கொண்டு எவ்வித கணக்கறிக்கை செயற்பாடுகளும் இன்றி நடாத்தப்படுவதும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துகொள்வதனையும் காணக்கூடியதாக உள்ளது. மதரஸாக்களுக்கு சொந்தமான காணிகளை தமது சுயவிருப்பில் விற்பனை செய்துகொள்வது போன்ற அம்சங்களும் இல்லாமல் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட ஒரு கல்லூரிக்கு விஜயம் செய்தபோது அனைத்து வளங்களும் அங்கு காணப்பட்டது. வருடாந்தம் சுமார் 50 மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வந்த குறித்த கல்லூரியில் தற்போது 25 மாணவர்கள் அளவிலேயே மொத்தமாக காணப்பட்டனர். ஏழு வருட கற்கை நெறி என கல்லூரி நிருவாகம் குறிப்பிட்டபோதும் மாணவர்கள் பாடசாலை வகுப்பினடிப்படையிலேயே பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். வெளிநாட்டு உதவிபெறும் இக்கல்லூரி நிருவாகம் எவ்வித கல்வி மேம்பாட்டு திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை என அறிய முடிந்ததுடன் உரிய கணக்கறிக்கைகளும் பேணப்பட்டிருக்கவில்லை என காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறு பல்வேறு எதிர்மறைகள் அரபுக்கல்லூரிகளை சுற்றி வெளிவராத உண்மைகளாக காணப்படுவதனை அவதானம் கொண்டே கௌரவ அமைச்சர் ஹலீம் அவர்கள் அரபுக்கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படுவதனை நிறுத்தி நன்கு வளமுள்ள கல்லூரிகளை மேலும் தரப்படுத்தவேண்டும் என்ற கருத்தினை முன்வைத்துள்ளார்.

மாகாணத்தில் ஒன்று என்ற நிலைமாறி ஊருக்கு இரண்டுஇ மூன்று ஐந்து என அரபுக்கல்லூரிகள் தோற்றம்பெறுவதனால் எந்தவொரு அரபுக்கல்லூரியையும் சிறப்புற செயற்படுத்த முடியவில்லை என்ற உண்மையினை நடைமுறையில் விளங்கியே ஆகவேண்டும். குறைந்தது மாவட்டத்தில் ஒரு அரபுக்கல்லூரியை தெரிவுசெய்து வலுப்படுத்தவேண்டிய தேவைசமூகத்திற்கு உள்ளது.
அனைத்து அரபுக்கலாசாலைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம் அமைகின்றபோது  சமயப்பாட ஆசிரியர்கள் பதவி உள்ளிட்ட பல அரச பதவிகளுக்கும் உலமாக்கள் உள்ளீர்ப்பு  செய்ய வாய்ப்பாக அமையும் என்பதுடன் ஆளுமையுள்ள உலமா சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யும். இத்தகைய பாடத்திட்டம் ஒன்றினை மேற்கொள்ள கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முஸ்லீம் சமய விவகார திணைக்களம் முயற்சிக்கின்றபோதும் குறுகிய கொள்கைசார் சிந்தனையினால் அம்முயற்சி தேக்கம் அடைந்துள்ளமை குறித்து பேசவேண்டி தருணம் இதுவாகும்.

இத்தகைய பாரிய திட்டமிடல்கள் இல்லாமல் குறித்த விடயதானம் குறித்த எவ்வித ஆழ அகல அறிவில்லாமல் கௌரவ அமைச்சர் அவர்களின் கருத்தினை சில்லறைத்தனமாக அரசியலாக்குவது முதிர்ச்சியுள்ள ஒரு சமூகத்திற்கு பொருத்தகமானதாக  அமையாது.

போதையை ஒழிப்பது யார்?
=================


போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி முதல் குத்பா பிரசங்கம் நடத்தும் மெளலவி வரை வரிந்து கட்டிகொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றனர். இவர்கள் செய்வது என்ன, நாலு பேரைக் கூட்டி ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ என்று கூப்பாடு போடுவது மட்டும்தான். அதைவிடுத்து போதையை ஒழிக்க ஆரோக்கியமாக எதைச் செய்தார்கள் என்றால் கேள்விக்குறியே எஞ்சுகிறது.

காலையில் ‘போதையை ஒழிப்போம்’ என்று பதாகை தூக்கி ஊர்வலம் சென்ற மாணவன் மாலையில் வீடுதிரும்பியதும் தனது தந்தைக்கு சிகரட் வாங்கிக்கொடுக்கிறான். நாம் இப்படிப்பட்ட சமூகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் ஏற்படாத மாற்றத்தை வெளியில் எதிர்பார்க்கின்றோம்.

பிரபலமான பாடசாலையொன்றில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு ஆசிரியர் ஒருவரை நியமித்திருக்கின்றனர். கடைசியில் அவர்தான் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்கிறார் என்று மாணவர்கள் என்னிடம் சொன்னபோது, மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

நான்கு பேரைக் கூப்பிட்டு, போதைப்பொருள் பாவனையின் தீங்குகள் குறித்து பேசினால், அவர்கள் அதனை பாவிக்காமல் விட்டுவிடுவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு’ என்று சும்மா சொல்லவில்லை. போதையை விடுவோம் என்று நினைத்தாலும், அவர்களால் அதை விட்டுவிடமுடியாது. ஒருநாள் ஒதுங்கியிருந்தாலும் அடுத்தநாள் தொடர்ந்துவிடுவார்கள்.

இப்படியானவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து முற்றாக விடுவிப்பதற்கு நாம் என்ன திட்டங்களை வைத்திருக்கிறோம். அவர்களை போதைவஸ்து பாவனையிலிருந்து எவ்வாறு படிப்படியாக மீட்பது என்பது பற்றிய தெளிவானதொரு திட்டம் இல்லாதவரை, போதைப்பொருள் ஒழிப்பு பிரசாரம் என்பது வெற்றுக் கோசமே அன்றி, வேறில்லை.

போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களில் 60 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் மாத்திரம் இருக்கின்றனர். பதின்ம வயதிலேயே இவர்கள் போதைவஸ்து பாவனைக்கு பழக்கப்படுகின்றனர். அவர்களது நண்பர்களும் சூழலுமே இதற்கு பிரதான காரணங்களாகும். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பெற்றோர் பணம் கொடுக்காது விட்டாலும், கடைசியில் திருட்டுத் தொழில் இறங்கி தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.

போதைவஸ்துக்கு அடிமையானவர்களை மீட்பதற்கு அந்தந்த பிரதேசங்களிலுள்ள மதஸ்தலங்கள் முன்வரவேண்டும். போதைக்கு அடிமையானவர்களை முழுமையாக விடுவிக்க நீண்டகால திட்டங்களை அமுல்படுத்த, சரியான திட்டவரைபுகளை மேற்கொள்ள வேண்டும்.

குறித்த பிரதேசங்களிலுள்ள போதைவஸ்து பாவனையாளர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.

சிகரட் புகைத்தால் புற்றுநோய் வரும் என்று அட்டைப் பெட்டியில் அச்சிட்டும் அதை வாங்கி புகைக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில் போதைவஸ்து ஒழிப்புக்கு ஆரோக்கியமான மாற்று உபாயங்களை கையாளாதவரை, விழிப்புணர்வு ஊர்வலமோ அல்லது மார்க்க பிரசாரங்களை அவர்கள் மனங்களை மாற்றப்போவதில்லை. சொல் வீரரை விட செயல் வீரராக இருப்போம்.

#பிறவ்ஸ்

#NoDrugs

கொழும்பு காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

( மினுவாங்கொடை நிருபர் )

   இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகைகளால், கொழும்பு - காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
   சனிக்கிழமை (26), ஞாயிற்றுக்கிழமை (27) நாட்களில் இந்த ஒத்திகை நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில்,  எதிர்வரும் 31 ஆம் திகதியன்றும் மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3 ஆம் திகதி வரையிலும் குறித்த ஒத்திகைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக,  போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதிப்  பாதுகாப்பு தொடர்பிலான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார். 
   காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை,  காலி முகத்திடலின் ஒரு பகுதி மூடப்படுவதுடன், கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு பகுதியும்,  லோட்டஸ் வீதியின் செரமிக் சந்தியும், குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளது.
   இந்தக்  காலப்பகுதியில், காலி வீதியூடாக புறக்கோட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள்,  லிபர்ட்டி சுற்று வட்டம், பித்தளைச் சந்தி, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, அக்பர் வீதி, மலே வீதி, சிற்றம்பலம் கார்டனர் வீதி ஊடாக,  கொழும்பு புறக்கோட்டையைச் சென்றடைய முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
   அத்துடன்,  கொழும்பு, புறக்கோட்டையிலிருந்து காலி வீதிக்குச்  செல்லும் வாகனங்கள்,  மேற்குறிப்பிட்ட சிற்றம்பலம் கார்டனர் வீதி,ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக காலி வீதியைச்  சென்றடைய முடியும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கஹட்டோவிட்ட மண்ணின் மைந்தனாம் அல் ஹாஜ் எம்.எம் மொஹம்மத் அவர்கள் இலங்கை சனநாயக குடியரசின் 9ஆவது தேர்தல் ஆணையாளராக பதவியுயர்வு பெற்றதை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 9.30 முதல் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பல்வேறு விசேட அதிதிகள் உரை நிகழ்த்தியதுடன் மற்றும் பல உள்ளூர் வெளியூர் விசேட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

குறிப்பாக நீதியரசர் ஸலீம் மர்சூக் மற்றும் ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் பயின்று உயர் பதவிகளில் இருக்கின்ற முக்கிய அதிதிகளின்  பாராட்டு உரையும் இடம் பெற்றதோடு .முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் கௌரவ  என்.எம் அமீன் அவர்களின் உரையும் ஊர் சார்பில் சொல்லின் செல்வன் முன்னால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் எம்.இஸட் அஹமத் முனவ்வர் ஹாஜியார் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.
இடைக்கிடையே கஹட்டோவிட்ட பாதிபிய்யாச் சங்கத்தினால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட முஹிய்யத்தீன் ஜும்மாப்பள்ளிவாசல் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை சார்பில் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட ஜே.எப் அமைப்பினரால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட நபவிய்யா தக்கியாவினால் வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட sedo அமைப்பினர் வழங்கிய நினைவு பரிசு ,கஹட்டோவிட்ட அல் பத்றியாவில் பயின்ற அவரது சக மாணாக்கர் 1975 வகுப்பினரின் நினைவுச்சின்னம்,கஹட்டோவிட்ட கமியுனிட்டி போரத்தின் நினைவுச்சின்னம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் தரீக்காக்களினதும் சார்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம் எம் மொஹம்மத் அவர்களைப்பாராட்டி கௌரவித்தமை விசேட அம்சமாகும்.

பெருந்திரளான உள்ளூர் வெளியூர் அதிதிகள் பிரமுகர்கள் ஊர்ப்பொதுமக்கள் என பல்வேறு பட்ட சகோதரர்களும் கலந்து அரங்கை நிரப்பமாக்கியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.நிகழ்வுகளின் போதான படங்களை இங்கே காணலாம்.

















படப்பிடிப்பும் செய்தித் தொகுப்பும்
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
கஹட்டோவிட்ட.
Blogger இயக்குவது.