தம்புள்ளை பள்ளிவாசளை அகற்றுவது தொடர்பாக மேயரின் கருத்து கண்டிக்க தக்கது என கலேவல பிரதேச சபை உறுப்பினரும் தம்புல்ல கலேவெல S.L.M.C அமைப்பாளர் வீ.எம்.மௌபீத்

******************************************************************************************************
நேற்று முன் தினம் தம்புள்ளை நகர் சபையில் தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றுவது தொடர்பாக பிரேரணை கொண்டுவரப்பட்டு  மேயர் தாலிய ஒபாதே கூறிய கருது எமது நாட்டில் முழு முஸ்லிம் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியுள்ளது மேலும் அவர் தெரிவிக்கையில் சிங்கள இனக்கலவரம் ஏற்படா வண்ணம் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலே நான் குறித்த முடிவை எடுக்க எத்தனிப்பதாகவும் புனித பூமிக்குள் பள்ளிவாசல் இருக்கமுடியாத்து ஆரம்பத்தில் ஒரு சிறு கதையாகவே கண்ணப்பட்ட இடம் இப்போது பள்ளிவாசலாக தோற்றமளிக்கிறது எனவும் வெறுமனே முஸ்லிம் குடும்பங்கள் 7 மாத்திரமே உள்ளன என்றும் அவர்களுக்கும் கூட நஷ்ட்டஈடு வழங்க முடியும் எனவும் குறித்த பள்ளிவாசலை நிக்கவட்ட வென பகுதியிலுள்ள பௌத்த விகாரைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டி தரமுடியம் என்றும் கூறிய மேயர் அரசியல் நெருக்கடி காரணமாகவே இழுபறி நிலை காணப்பட்டதென்றும் அவற்றை அகற்றுவதே சரியான தீர்வென்றும் கூறியுள்ளார்.

குறித்த நிக்கவட்ட வென பகுதி தம்புள்ளை நகரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளதும் குறிப்பிட தக்கது கடந்த 2012 ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் பேரினவாதிகளால் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம் மீண்டும் இந்த நல்லாட்சியில் தொடரில் மஹிந்த அணியை சார்ந்த மொட்டில் போட்டியிட்டு வென்ற மஹிந்தவின் ஏஜென்ட் இவ்வாறு தெரிவித்திருப்பது நாட்டில் எமது முஸ்லிமகளையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையாக பள்ளிவாசலை அகற்ற
முடியாது அவற்றுக்கு தீர்வு பெற்றுத்தரவேண்டும் என்றும் பேசி இருந்தார்.

எனவே தம்புள்ளை ஹைரியா ஜும்மா பள்ளிவாசலை எக்காரணம் கொண்டும் அகற்ற முடியாது என்று பிரதேச சபை உறுப்பினர் மௌபீத் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.