கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை உத்துர தேவி ரயில் சேவையில் புதிய ரயில் வண்டியின் வெள்ளோட்டம் நாளை இடம்பெறவுள்ளது. 

அன்றைய தினம் காலை ஆறு மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் வண்டி புறப்படும். இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கலந்து கொள்வார்கள். 

வடக்கு, தெற்கு நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் புதிய ரயில் வண்டி சேவையில் ஈடுபடுத்தப்படுவது சிறப்பம்சமாகும். இந்த ரயில் வண்டி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது. 

வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும் இரண்டாம் வகுப்பு பெட்டியும் அதில் அடங்குகின்றன. மொத்தமாக 724 பயணிகள் ஒரே தடவையில் பயணிக்கலாம். 

இந்த ரயில் வண்டியில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்காக புத்தகப் பைகள், அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன. 

அரச தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.