மஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்
தெல்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஜும்மா மஸ்ஜித்களையும் ஏனைய மஸ்ஜிதுகளையும ;
ஒன்றிணைத்து ஒரு குடையின ; கீழ் இருந்து தெல்தோட்டை பிரதேச கல்வி, பொருளாதாரம்,
சுகாதாரம், இளைஞர் விவகாரம், பெண்கள் விவகாரம், அனர்த்த முகாமைத்துவம், சமூக
நல்லிணக்கம், தகவல் திரட்டல் போன்ற  விடயங்களை முன்னெடுக்கின்ற பணியினை
தெல்தோட்டை பிரதேச மஸ்ஜித் சம்மேளனம் மேற்கொண்டு வருகின்றது.

இதனடிப்படையில் தெல்தோட்டை பிரதேச மஸ்ஜித் சம்மேளனம், ம Pட்ஸ் அமைப்பு மற்றும்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தெல்தோட்டை கிளை ஆகியவை இணைந்து
மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் கருத்துரைகள் கலந்துரையாடி தீர்மானங்களை பெற்று மஸ்ஜித்
நிர்வாக தலைமைகளின் கீழ் சீராக நடைமுறைப்படுத்தும் நோக்கில் விசேட கருத்தரங்கொன்றினை,
2019 ஜனவரி மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை
தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரியின் இப்ராஹிமிய்யா தொழில்நுட்பக் கல்லூரி
பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வின் விசேட வளவாளர்களாக ஜாமியா நளீமியாவின் பிரதி பணிப்பாளரும், அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித்தலைவருமான அஷ் ஷெய்க் அகார் முஹம்மத்
(நளீமி) அவர்களுடன் இன்னும் பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

ஏற்பாடு:
தெல்தோட்டை பிரதேச மஸ்ஜித் சம்மேளனம்,
மீட்ஸ் அமைப்பு மற்றும்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா - தெல்தோட்டை பிரதேசம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.