கிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மையினால் ஒருவர் பலி


கிண்ணியாவில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது ஆற்றில்
குதித்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கிண்ணியாவை சேர்ந்த 22 வயதினை உடைய முஹம்மத ராஷிக் முஹம்மத் என இணங்காணப்பட்டுள்ளார்.

குறித்த சுற்றி வளைப்பின் போது மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்ட கல் வீச்சு தாக்குதலினால் கடற்படை வீரர்கள் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கடற்படை ஊடக பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here