மண்ணுக்குப் பெருமை சேர்த்த மண்ணின் மைந்தன்

               கஹட்டோவிட்ட மண்ணுக்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தன் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முஹம்மத் அவர்கள் தம் உழைப்பால் உயர்ந்த மா மேதை.

       உயர உயரப் பறந்து ஊர்க்குருவி பருந்தாகி விட்டது, என்பதை நிரூபித்து விட்டார். ஆம், உதவித் தேர்தல்கள் ஆணையாளராக தேர்தல் திணைக்களத்துள் பிரவேசித்த இவர் மாவட்டத் தேர்தல் ஆணையாளர் , மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் பணிப்பாளர் நாயகம் போன்ற பதவிகளை வகித்து வந்தமை அவரது முன்னேற்றத்தின் சுவடுகள்.

       தேர்தல் ஆணையாளராக நியமனம் பெறும் முதலாவது முஸ்லிம் என்ற பெருமையும் இவரையே சாரும். மேலும் உயர் பதவிகளை வகித்து எமதூருக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டி பிராத்திக்கிறோம்.

பயாஸா பாஸில்

Share:

No comments:

Post a Comment