அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை


12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் நேற்று (24) முற்பகல் 10.30 கூடியபோது அவர் இதனைத் தெரிவித்தார். 

பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட பொழுதிலும், மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட வில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அதே போல பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவையும் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

அரச தகவல் திணைக்களம்
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here