எமது கஹடோவிட சந்தியில் மணிக்கூட்டு கோபுரம் ஒன்றிணை அமைத்தல் மற்றும் கஹடோவிட பிரதான வீதியிலிருந்து செல்லுகின்ற ஒழுங்குகள் மற்றும் வீதிகளுக்கு பெயர்கள் வைப்பது சம்பந்தமாக :- எமது கஹடோவிட சந்தியில் மணிக்கூட்டு கோபுரம் ஒன்றிணை அமைக்கவும் பிரதான வீதியிலிருந்து செல்கின்ற ஒழுங்குகள் மற்றும் வீதிகளுக்கு (கஹடோவிட சந்தி தொடக்கம் வரபலான வீதி வரை) உதாரணமாக 1st Lane, 2nd Land, 3d Lane என்று வைப்பது சம்பந்தமான தீர்மானம் ஜனநாயக ஐக்கிய மக்கள் காங்கிரஸ் (DUPC) உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸின் பொதுச் செயலாளர் கமால் அப்துல் நாஸர் J.P. தெரிவித்தார்.

இத்தீர்மானத்தினை எமது கிராமத்திலுள்ள மூன்று ஜும்மா பள்ளிவாசல்களுக்கும் மற்றும் ஏனைய அமைப்புக்களுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான பிரதேச சபை உறுப்பினர்களான  நஜீம் J.P.  மற்றும் இன்ஷாப் மற்றும் பிரதேச சபை வேற்பாளர்களான  ருஷ்தி ஹாஜியார், A.H.M.அஸாம், M.H.M. நஸீர் ஆகியோருக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதை அறியத்தருகின்றோம்.

காங்கிரஸின் தலைவர் ஸுஹைல் மொஹமட் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸின்  தேசிய அமைப்பாளரும் பிரச்சார செயலாளருமான M.H.M.கியாஸ், பிரதித் தலைவர் S.K.M.அஜ்மல்,  பொருளாளர் M.N.M.ரிஷாட், ஊடகச் செயலாளர் A.B.M.ஸஈத், பிரதி தேசிய அமைப்பாளர் M.S.M. ரிஷான், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் M.R.M.ரிப்கான், பிரதி ஊடக செயலாளர் ரியாஸ் மொஹமட், பிரதிப் பொருளாளர் A.G.M. ருமைஸ் உட்பட இன்னும் பல உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.