பூ மணக்கும் நல்ல புகழ் மணக்கும்
   பா மணக்கும் என்றும் நா மணக்கும்
கஹட்டோவிட்ட ஈன்றெடுத்த ஒரு
   காவியத் தலைவன் மஹ்தூம் முஹம்மத்
இலங்கைத் திருநாட்டின் அதியுயர் பதவி பெற்று
   தேர்தல்கள் ஆணையராய் திகழும் உன் பேரின்று
திகட்டாத உன் நாப் பேச்சால்
   திரண்டிடுமே பெருங்கூட்டம் ஒன்று
                         ₹₹₹₹₹₹₹₹₹
எதுவரினும் கொள்கையதை விட்டிடாமல்
   எக்கணமும் உறுதியுடன் விளங்கி நின்றாய்..
கல்வி எனும் செல்வம் போல் உலகில் வேறு
   காண்பதற்கு ஒன்றுமில்லை என்று நின்றாய்
அல்லுபகல் உழைத் துழைத்து ஆர்வத்தாலே
   ஆணையாளர் எனும் பதவி கிடைக்கப் பெற்றாய்..
ஈன்ற போதில் பெரிதுவக்கும் பெற்றோருக்கு
   சான்றோனாய் இன்று புகழ் பூத்து வென்றாய்
                            ₹₹₹₹₹₹₹₹₹₹
என் மனைவி மவ்பியாவின் மைத்துணனாய்
   'என்  உறவு' என்பதிலே பெருமையுற்றேன்..
அகிலமெலாம் போற்றும் நல்ல உத்தமரை
   உருவாக்கும் நளீமிய்யா வின் புதல்வா நீயும்
அடியெடுத்து வைத்து இன்று 'ஆணை' செய்ய
   அணிதிரளும் உன் நண்பர் கூட்டம் கண்டேன்
எதுவரினும் அஞ்சாது சேவை செய்ய
   இறைவன் அருள் என்றென்றும் கிடைப்பதாக..

கவி ஆக்கம்: காவூர் ஜமால்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.