முஸ்லிம்கள் உலகின் மறுக்கமுடியாத சக்தியாக, ஒரு வல்லரசாக கோலோச்சிய உதுமானியப் பேரரசின் சொந்தக்காரர்கள். அது துருக்கியை மையப்படுத்தி அமைந்திருந்த ஒரு சாம்ராச்சியம்.
இறுதியில் அதன் நினைவாக எஞ்சியிருந்தது துருக்கித் தொப்பி மட்டுமே. அதனை இலங்கை முஸ்லிம்களின் அடையாளமாக்கினோம்.
ஒவ்வொரு முஸ்லிமினதும் உள்ளங்களிலும் நிலைகொள்ளச் செய்து வழக்காடு மன்றத்தில் கூட முஸ்லிம்கள் அதனை அணிந்து செல்ல அனுமதி பெற்றிருந்தோம்.
இன்று மருந்துக்குக் கூட அதனைக் காணமுடியாத அளவு நம் பாரம்பரியத்தை தெரியாமல் சிதைத்தவர் சிலர்;
தெரிந்தே சிதைத்தவர் இன்னும் சிலர்.
இயக்க வெறியும்,
துருக்கியை
சரித்திரத்தில் சாய்த்தவர்களின்
நிதியும்
எமது சாம்ராஜ்ய சரித்திரத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டன.
இன்று பண்பாட்டுக் காவலர்களாக தங்களை கட்டமைத்துக்கொள்ள கடும் பிராயச்சித்தம் எடுக்கும் இவர்களது துருக்கித் தொப்பிக்கு நேர்ந்த கதிதான் என்ன?
இன்று எந்த முஸ்லிம் வழக்கறிஞர் நீதிமன்றில் துருக்கித்தொப்பியோடு வழக்காடுகிறார்? இவர்கள்தான் இன்றைய கலாசாரக் காவலர்கள். விந்தையான உலகமடா!
வேடதாரிகளின் வலையில் விழுவதே வாடிக்கையாகிவிட்டது எம் சமூகத்துக்கு......
(Dr.Rishi)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.