ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கஹடோவிட மத்திய கமிட்டியின் வேண்டுகோளின் பேரில் SLMC யின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் J.P. அவர்களின் நிதி ஒதுக்கீட்டினால்  கஹடோவிட, ஒகொடபொல கிராமங்களைச் சேர்ந்த 10 பேருக்கு 10 சைக்கிள்களும் ஓகொடபொலையைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு தையல் இயந்திரம் ஒன்றும் வழங்கும் வைபவம்  மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் J.P. அவர்களின் தலைமையில்  நேற்று மாலை ஓகொடபொலையில் அமைந்துள்ள பிரதேச சபை வேற்பாளர் மாஸ்டர் M.H.M. ரம்ஸான் அவர்களின் இல்லத்து முற்ற வெளியில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் எமது கட்சியாகிய ஜனநாயக ஐக்கிய மக்கள் காங்கிரஸின் தலைவர் ஸுஹைல் மொஹமட், SLMC யின் உயர்பீட உறுப்பினர் அல்ஹாஜ் M.N.M. ஜவுஸி J.P. பி.ச. வேற்பாளர்களான A.H.M.அஸாம், M.R.M. ஸரூக், G.A.ஸல்மான், M.R.M.ரிஷான், உட்பட கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(நாஸர் JP)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.