மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிசின் நிதியொதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன

(அஷ்ரப் ஏ சமத்)

மேல் மாகாண  சபை உறுப்பினர் மொஹமட் பாயிசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று(13) கொழும்பு வடக்கு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  மட்டக்குழி கதிரவன் வீதியின் உள்ள 50 குடும்பங்கள் வாழும் வீதி செப்பணிட்டு 12 இலட்சம் ருபா செலவில் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் கொழும்பு வடக்கு பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் 150 குடும்பங்களுக்கு சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்கான உபகரணங்கள் 50 இலட்சம் ருபா  பெறுமதியான உபகரணங்களும் பகிாந்தளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சா் எம்.எஸ்.எஸ் அமீா் அலி, பிரதியமைச்சா் அப்துல்லாஹ் மஹ்ருப், பாராளுமன்ற உறுப்பிணா்களான முஜிபு ரஹ்மான், கலாநிதி ஏ.இஸ்மாயில் மற்றும் சீமொந்து கூட்டுத்தாபணத்தின் தலைவா் றியாஸ் ஸாலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளா் சுபைதீன் ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனா்.

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here