பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வழக்கின் தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை என்பதால் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக நீதிபதி மகிந்த சமயவர்தன திறந்த நீதிமன்றில் தெரிவித்தார். 

சுற்றுச்சூழல் நீதி மையத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வழக்கின் பிரதிவாதிகளாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனப் பாதுகாப்பு திணைக்களம், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர். 

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.