முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலலான கலந்துரையாடல்


முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் இன்று (07) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்தல், காதி நீதிமன்றங்களை நெறிப்படுத்த வலையமைப்பின் கீழ் கொண்டுவருதல் மற்றும் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தயாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர்கள், ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here