கஹட்டோவிட்ட தாய் சேய் பராமரிப்பு நிலையத்தினை அபிவிருத்தி செய்ய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமினால் ரூபா 10 மில்லியன் நிதி

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)

கஹட்டோவிட்ட, மௌலானபுரவில் அமைந்துள்ள தாய், சேய் பராமரிப்பு நிலையும் நீண்ட காலமாக பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்தது. 

சென்ற சுதந்திர தினமன்று பிரதேசத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் அவர்கள் நிலைமையினை அவதானித்ததுடன், தனது நிதியில் இருந்து ரூபா 10 மில்லியனை அதனது அபிவிருத்திக்காக ஒதுக்க நடவடிக்கை எடுத்தார்.

இதன் போது மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் கஹட்டோவிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேச மக்கள் கலந்து கொண்டிருந்தனர். 

இதேவேளை திஹாரியில் உள்ள மத்திய மருந்தகத்தின் அபிவிருத்திக்கு இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமினால் ரூபா 25 மில்லியன் ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here