இலங்கையில் 1,683 தொழுநோயாளர்கள்


இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 1,683 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 26 மாவட்டங்களில் தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தொழுநோய் கட்டுப்பாட்டுத்திட்ட பணிப்பாளர்,
வைத்தியர் சம்பா ஜே.அலுத்வீர சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுச் சபையில் நேற்று (04) நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மேல் மாகாணத்தில் புதிதாக  41 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட  அதேவேளை, மேல் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 691 ஆகும். மேலும், 6 மாதங்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்பட்ட 30 சதவீதத்தினர் சிகிச்சை பெற்றதாகவும்  அவர் கூறியுள்ளார்.

எனவே, தொழுநோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படின் உரிய முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோயைக் குணப்படுத்த முடியுமென வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். (TKN)
Share:

No comments:

Post a Comment

sdf

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here