மெக்சிக்கோ எல்லைப் பகுதியில் சுவர் எழுப்புவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின் 16 மாநிலங்கள் டிரம்பின் நிருவாகத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுவர் எழுப்பும் திட்டம் டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று எனக் கூறப்படுகின்றது. அமெரிக்கா – மெக்சிக்கோ எல்லைப் பகுதியில் சுவர் ஒன்றை எழுப்புவது அல்லது இரும்பு வேலி அமைப்பது டிரம்பின் திட்டமாகும். இதற்கு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றது. (DC)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.