அத்தனகல்ல வலய மட்டத்துக்குட்பட்ட 18 வயதின் கீழ் பிரிவில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுத் தொடரில் கஹட்டோவிட்ட பத்ரியாயா சம்பியன்


அத்தனகல்ல வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையே வைக்கப்பட்ட 16,18வயதின் கீழ் பிரிவிற்கிடையே நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியில் 18 வயதின் கீழ்ப்பட்ட கஹட்டோவிட்ட பத்ரியா அணியினர் அல் அஸ்ஹர் அணியினரை 1:0 என்ற கோள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.16 வயதிற்கினருக்கிடையே நடைபெற்ற போட்டியில் 3:0என்ற கோள் வித்தியாசத்தில் உடுகொட அரபா அல் பத்ரியா அணியினரை தோற்கடித்திருந்தனர்.

எது எவ்வாறான  போதும் கால் பந்தாட்டப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்றியா அணியினர் 12,14,16,18 வயதுப்பிரிவினரிடையே விளையாடும் வீரர்கள் சிறந்த முறையில் விளையாடி அண்மைக்காலமாக  தேசிய ரீதியாகவும் ,வலய மட்ட ரீதியாகவும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டி  வெற்றிகளை ஈட்டிக்கொடுத்து பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.


(Mohamed Luthufullah)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.