2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்


2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 25ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைகள் மூலமாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை பரீட்சைத் திணைக்களத்தின www.doenets.lk எனும் இணையளத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.  

அத்துடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் தங்களது விண்ணப்பப்படிவங்களை அனுப்பிவைக்க வேண்டுமெனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here