2 நாள் அரசு முறை பயணமாக சவுதி இளவரசர் நாளை இந்தியா வருகை


சவுதி அரேபியாவின்  இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு, 2 நாள் பயணமாக சல்மான் நாளை (20)  இந்தியா  வரவுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here