சகல அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம் தரத்தில் உள்ள வகுப்புக்களில் ஆகக் கூடியது 37மாணவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படல் வேண்டுமென கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை அமுல்படுத்தும் விதத்தில் இந்த எண்ணிக்கையில் மாணவர்களை அனுமதித்தல் வேண்டும்.
இவ்வெண்ணிக்கைக்கு மேல் மாணவர்களை அனுமதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பாக கருதப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2021ம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கையில்  ஒரு வகுப்பில் 35மாணவர்களை மாத்திரம் அனுமதிப்பதற்கேற்ற விதத்தில் பாடசாலை அதிபர்கள் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டுமெனவும் கல்வியமைச்சு அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது. 

இதேவேளை இவ்வாண்டில் 350அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்தில் ஒரு மாணவரேனும் அனுமதிக்கப் படவில்லை யென்ற அதிர்ச்சித் தகவலையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத் திட்டம் காரணமாக முதலாம் தர அனுமதிக்காக நகரப்புற பாடசாலைகளை நாடிவரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.