ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் மூலம் போலி அட்டைகளை தயாரித்து பணம் பெற்று வந்த சீனர்கள் இருவர் மற்றும் ருமேனியா நாட்டவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளின் தகவல்களை பயன்படுத்தி, போலியான அட்டைகளை தயாரித்து ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் பெற்றுவந்த சம்பவங்கள் தொடர்பில்,

ஏடிஎம் இயந்திரங்களில் அட்டைகளை செலுத்தும் இடத்தில் சிறிய உபகரணம் ஒன்றை வைத்து அதன் மூலம், குறித்த ஏடிஎம் இயந்திரங்களில் செலுத்தப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளின் தகவல்களை, சந்தேக நபர்கள் தங்களது கையடக்க தொலைபேசியில் நேரடியாக பெற்று, போலியான அட்டைகளை தயாரித்து பணம் பெற்று வந்த கும்பலை கைது செய்வது தொடர்பில், குற்றவியல் விசாரணை திணைக்களத்தால் (CID) இரண்டு வாரங்களுக்கு முன்னிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடந்த ஜனவரி 20 ஆம் திகதி கொழும்பு கோட்டை, சதம் வீதி பகுதியில் சீனர் ஒருவரும் ஜனவரி 20 ஆம் திகதி வெள்ளவத்தைப் பிரதேசத்தில் மற்றுமொரு சீனர் ஒருவரும் பெப்ரவரி மூன்றாம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் ருமேனியாவாசி ஒருவரும் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ATM அருகில் சந்தேக நடமாட்டம் தொடர்பில் அறிவிக்கவும்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.