கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு உரிய காலத்தில் தேசிய அடையாள அட்டை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு உரிய காலத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுமென ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். 
இதற்காக விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்படுவதாகவும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை கையளிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.    மாணவர்கள் இதற்கான புகைப்படத்தை திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பெற்று அவற்றை இணையத்தளத்தின் மூலமாக சமர்ப்பிக்க முடியும். 
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப் பரீட்சை முன்பதாகவே நடத்தப்படும் என்பதால் தேசிய அடையாள அட்டையை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு இது வசதியாக அமையும்.    கடந்த வருடத்தில் இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததாகவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
15 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here