மன்னார் நகர் பகுதியிலுள்ள கால் நடைகளை உரிய முறையில் அறுக்க முடியும்; மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி


மன்னார் மாவட்டத்தில் உள்ள கால் நடைகளுக்கு 'கால் வாய்' எனும் ஒரு வித நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மன்னார் நகரில் உள்ள கால் நடைகளை மிருக வைத்திய பரிசோதனையின் பின்னர்  உரிய அனுமதியை பெற்று இறைச்சிக்காக அறுக்க முடியும்
என மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி. லெம்பேட் தெரிவித்தார்.

மன்னாரில் கால் நடைகளுக்கு 'கால் வாய் நோய்த்தாக்கம் தொடர்பில் இன்று (6) அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பகுதியை தவிர நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு அகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கால்நடைகள் கால்வாய் நோய்த்தாக்கத்தினால் பாதீக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கால் நடைகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு அகிய பிரதேசங்களில் இருந்து தற்போதைக்கு இறைச்சிக்காக மடுகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பகுதிகளில் உள்ள கால்நடைகள் ஏற்கனவே மிருக வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டு அடையாளமிடப்பட்ட மாடுகள் மிருக வைத்திய அதிகாரியின் பரிசோதனையுடன் இறைச்சிக்காக அறுக்க முடியும்.

மேலும் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்கு மாடுகள் கொண்டு வருவதாக இருந்தால் மிருக வைத்திய அதிகாரியின் பரிசோதனை மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பரிசோதகர்களின் அனுமதியுடன் மன்னாருக்கு கொண்டு சென்று மன்னார் மிருக வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின் மாடுகளை இறைச்சிக்காக அறுக்க முடியும்.

இவ்விடையம் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நகர முதல்வர் தலைமையில் அவசர கூட்டம் ஒன்று இடம் பெற்றது.

இதன் போது குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here