ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஆர்ப்பாட்டம்!


தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நீக்குமாறு கோரி ரூபவாஹினி தலைவரின் அலுவலக அறையை பணியாளர்கள் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.


சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நீக்குமாறு கோரி நீண்ட காலமாக பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தலைவரின் அலுவலக அறையை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருகிறது.

குறித்த கோரிக்கையை முன்வைத்த ரூபவாஹினி தொழிற்சங்க உறுப்பினர்கள் 21 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமையே ஆர்ப்பாட்டத்திற்கான பிரதான காரணம் என அறிய முடிகின்றது.

தற்போதைய சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அதிக சம்பளத்திற்கு ரூபவாஹினிக்கு நியமிக்கப்பட்டுள்ள போதும், அவரால் நிறுவனம் நட்டம் அடைந்துள்ளதாக பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (Athavan)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here