கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு தண்ணீரோ சேறோ ஊற்றும் வீடியோ ஒன்று அண்மைக்காலங்களாக வெப்சைட்டுகளில் பவனி வந்து கொண்டு இருக்கிறது..அதற்கு கமெண்ட் எழுதிய சில உணர்ச்சிப் பிழம்புகள்,  மாற்று மத சகோதரர்களை கடுமையாய் திட்டித் தீர்த்து இருந்தார்கள்.ஃபேஸ்புக்கில் ஒரு சர்ச்சையான சம்பவம் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது இரண்டு நாட்களுக்கு எந்தக் கருத்தும் சொல்லாமல் மூடிக் கொண்டு இருந்தாலே அந்தப் பிரச்சினையின் ஆதி அந்தம் தெரிந்துவிடும்.ஆனால் குறைப் பிரசவத்தில் பிறப்பது போல முந்திக் கொண்டு எத்தனை பதிவுகள்...இப்போது என்ன என்றால் குறித்த மாணவிகளுக்கு அபிஷேகம் செய்தது முஸ்லிம் ஹலால் சீனியர் கோஷ்டியாம்...


ஆக்ரோஷமாய் கட்டுரை எழுதுபவர்கள், கமெண்ட் செய்பவர்கள், முதலில் அப்படி ஒரு சாமான் எழுதத் தேவை தானா என்று யோசிக்கவும்.பின்னர் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்று பார்க்கவும்.கடைசியில் யூ டி யுபில் ஒரு வடிவேலு ஜோக்கைப் பார்த்து கொஞ்சம் ரிலாக்ஸாகிக் கொண்டு ஆரம்பித்தால் கட்டுரைகளின் பயங்கரம் கொஞ்சம் குறைவடைந்து இருக்கும்.

'முகம் மூடுவதைத் தடை செய்ய வேண்டும் ' என்று யாரோ ஒரு நபர் அவரது அபிப்பிராயத்தை தெரிவித்து இருந்தார்.இது ஒரு பேஸ்புக் பேஜ் ஒன்றில் வந்து இருந்தது..கருத்துச் சொன்ன நபருக்கு கமெண்டில் வண்டி வண்டியாய் தூஷண சேலைன் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது..அதில் ஒரு கம்னாட்டி ,முழு நீள நீலப்படம் ஒன்றுக்கு லைவ் கமெண்ட்ரி அடித்தால் எப்படி இருக்குமோ அப்படிக் கமெண்ட் செய்து இருந்தது...இதை எல்லாம் பார்க்கும் போது ஆப்கானிஸ்தானில் இருப்பது போன்று இருக்கிறது.

ஒரு பக்கம் போதைப் பொருள் கும்பலின் பரந்து விரிந்த நெட் வேர்க், பிழைப்புவாத அரசியல் தலைமைகள்,இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை வழங்கி குடியுரிமை பறிக்கப்பட வேண்டிய பின்னூரி என்னும் போலி வைத்தியனும் கோஷ்டியும்.போதாக்குறைக்கு இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த புத்தர் சிலையை உடைக்கும் ஒரு கும்பல், எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல  'ஹலால் சேர்டிபிகேட் பிஸ்னஸ் ,பிறை பார்த்தல், பேன் பார்த்தலில் இருந்து ஜெனீவா மனித உரிமை ஆணையகத்திற்கு செல்வது வரை அத்தனையையும் செய்து கொண்டு இருக்கும் ஒரு மேட்டுக்குடி முல்லா கார்ப்பரேட் சபை..ஐயையோ .ஒன்றைப் பார்க்கவா, இரண்டைப் பார்க்கவா ?

நல்ல வேளை இலங்கையில் நாம் பத்தோ பன்னிரண்டோ வீதமாய் இருக்கிறோம்..தப்பித் தவறி பெரும்பான்மையாகினால் ஆப்கானிஸ்தான் தான்..

(ஸபர் அஹ்மத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.