வீதி விபத்துக்களுக்கு அதிகம் காரணமாய் அமைகின்ற பாரியளவிலான குற்றங்கள் சிலவற்றுக்காக அறவிடப்படுகின்ற தண்டப் பணங்களை அதிகரிப்பதற்காக இதற்கு முன்னர் யோசனையொன்று முன்வைக்கப்பட்ட போதும், அவற்றினை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு தரப்பினரினால் முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்திற் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் இது தொடர்பில் ஆராய்ந்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவினால் வாகன விபத்துக்களுக்கு பாரியளவில் காரணமாய் அமைகின்ற 10 குற்றங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அக்குற்றங்களுக்கான தண்டப் பணத்தொகையில் திருத்தம் செய்வதற்கும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், அதற்காக வரையப்பட்டுள்ள சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமரப்பிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.