சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (26) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது.

சாய்ந்தமருது தனியான நகர சபை அவசியம் என வலியுறுத்தி நீண்டகால போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருடன் கூடிய குழுவொன்று இவ்விடயம் தொடர்பில் மேலும் ஆராயும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதேவேளை சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் எடுக்கப்படும் சுமுகமான தீர்மானங்களுக்கு தாம் எவ்வேளையிலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ,உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன, அமைச்சர் றிஷாத் பதியுதீன், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். நசீர், எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.