மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தொடர்பான புதிய சுற்றிக்கை பல்கலைக்கழங்களுக்கு இன்று அனுப்பப்படவுள்ளது.

இது தொடர்பாக மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தகவல் தருகையில், இதுவரை காலமும் மகாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், அரசாங்கம் வழங்கிய இரண்டாயிரத்து 450 ரூபாவை பல்கலைக்கழகங்களின் ஊடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மகாபொல நிதியத்தினால் மேலும் இரண்டாயிரத்து 550 ரூபாய் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டு தவணைகளில் மாணவர்களுக்கு புலமைப் பரில் வழங்கப்பட்டது. புதிய சுற்றறிக்கையின்படி அந்த தொகை ஒரே தடவையில் ஐயாயிரம் ரூபாவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

அடுத்த மாதம் தொடக்கம் மகாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அந்த தொகை நேரடியாக வைப்புச் செய்யப்படும். மார்ச் மாதத்திற்கான புலமைப்பரிசில் தொகை ஏப்ரல் 10 ஆம் திகதி வைப்பிலிப்படும். தற்போது 60 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களும், ஆறாயிரம் தொழில்நுட்ப மாணவர்களும், ஏனைய நிறுவனங்களைச் சேர்ந்த மூவாயிரம் மாணவர்களும் மகாபொல புலமைப்பரிசில்களை பெற்று வருகின்றனர் என்று மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார மேலும் கூறினார். (news.lk)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.