உடைந்து நொறுங்கிய இந்திய விமானம் : சுட்டு வீழ்த்தினோம் - பாகிஸ்தான், கோளாறினால் விழுந்தது - இந்தியா
ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. பத்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும், விமானத்தில் பயணித்த பைலட் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

இதேவேளை பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானப்படையின் 2 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக, பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப் கபூர் கூறியுள்ளார். இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. 

இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 

(மாலைமலர்)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here