கஞ்சி பான இம்ரானின் பினான்ஸ் கொன்ட்ரோலர் கைதானார்!

(எம்.எப்.எம்.பஸீர்)


டுபாயில் மாகாந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானின் நிதிக்கட்டுப்பாட்டாளர் பொலிஸ் அதிரடிப் படையினரால் மாளிகாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான மொஹம்மட் நிஸ்தார் மொஹம்மட் அஸ்வர் என்பவரே இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார். ஆமர் வீதியைச் சேர்ந்த அவர், கஞ்சிபான இம்ரானின் நிதி விவகாரங்களைக் கையாண்டுள்ளதுடன், இம்ரானுக்கு சொந்தமான கட்டடம் ஒன்றினையும் நிர்வகித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே மாகந்துரே மதூஷின் சப்புகஸ்கந்தையில் உள்ள ஆசை நாயகியின் சிறிய தாய் வீட்டை அதிரடைப் படையினர் சோதனையிட்டபோது. சொகுசு வாகங்கள் இரண்டை அதிரடிப் படைக் கைப்பற்றி சப்புகஸ்கந்த பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளது.

(ஜப்னா முஸ்லிம்)
Share:

No comments:

Post a Comment

sdf

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here