அரபுக் கல்லூரிகளை பதியும் தீர்மானத்துக்கு ஆதரவில்லை - அரபுக் கல்லூரிகள் ஒன்றியம்


நாட்­டி­லுள்ள அர­புக்­கல்­லூ­ரிகள் அனைத்­தையும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் தீர்­மா­னத்தை அர­புக்­கல்­லூ­ரி­களின் ஒன்­றியம் ஆத­ரிக்­க­வில்லை. அவ்­வாறு பதிவு செய்­யப்­ப­டு­வதால் அர­புக்­கல்­லூ­ரிகள் பல அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யேற்­படும் என அர­புக்­கல்­லூ­ரிகள் ஒன்­றி­யத்தின் பொதுச்­செ­ய­லாளர் எஸ்.ஏ.எம். ஜவ்பர் தெரி­வித்தார்.

நாட்டில் இயங்கி வரும் அர­புக்­கல்­லூ­ரிகள் அனைத்தும் வக்பு சபையின் கீழ் பதி­வு­செய்­யப்­பட வேண்டும் எனும் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் தீர்­மானம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் 'வக்பு சபையின் செயற்­பா­டுகள் நீண்ட கால தாம­தத்­தையே ஏற்­ப­டுத்­து­கின்­றது.

வக்பு சபையில் உட­ன­டித்­தீர்­வு­களை பெற்றுக் கொள்ள முடி­யாத நிலை­யுள்­ளது. அரபுக் கல்­லூ­ரிகள் வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டு­வதன் மூலம் அவற்றின் செயற்­பா­டு­களில் கால­தா­ம­தத்­தையே ஏற்­ப­டுத்தும்.

புதி­தாக ஆரம்­பிக்­கப்­படும் மத்­ர­ஸாக்கள் தேவை­யான அடிப்­படை வச­திகள் மற்றும் வளங்­க­ளுடன் ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் அர­புக்­கல்­லூ­ரிகள் ஒன்­றியம் உறு­தி­யாக இருக்­கி­றது. 200 இற்கும் மேற்­பட்ட அர­புக்­கல்­லூ­ரிகள், ஒன்­றி­யத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

அர­புக்­கல்­லூ­ரி­களின் கல்வி நட­வ­டிக்­கை­களை ஒன்­றியம் தொடர்ந்தும் கண்­கா­ணித்து வரு­கி­றது. அத்­தோடு அவற்றின் தரத்­தினை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கி­றது.

அரபுக் கல்­லூ­ரிகள் ஒழுக்க விழு­மி­யங்­க­ளுடன் கூடிய இஸ்­லா­மிய வரம்­புக்குள் மாண­வர்­களை உரு­வாக்­கு­கி­றது.

இதே­வேளை, அர­புக்­கல்­லூ­ரி­களின் செயற்­பா­டுகள் குறித்து சமூ­கத்தைச் சேர்ந்த சிலர் தவ­றான கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கி­றார்கள்.

தரக்­கு­றை­வாக விமர்­சிக்­கி­றார்கள். ஒரு சில மத்­ர­ஸாக்கள், அர­புக்­கல்­லூ­ரி­களின் குறை­களை முன்­நி­றுத்தி அனைத்து அர­புக்­கல்­லூ­ரி­க­ளையும் தரக்குறைவாக மதிப்பிடுவதை அரபுக்கல்லூரிகள் ஒன்றியம் கண்டிக்கிறது.

அரபுக்கல்லூரிகளின் வளர்ச்சிக்கு சமூகம் தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்க வேண்டும் அவற்றின் வளச்சிக்கு தடையாக ஒரு போதும் இருக்கக் கூடாது என்றார். 
நன்றி : விடிவெள்ளி
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here