சுதந்திர இலங்கையில் முஸ்லிம்களும் முஸ்லிம் கலாசார அமைச்சின் பொறுப்பும் கடமையும்நாளை நடைபெறவிருக்கும் 71 ஆவது சுதந்திர தினம் (தேசிய தினம்) கொண்டாட நாடு பூராகவும் அனைத்து இன மக்களும் மும்முரமாக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் இவ்வேளை, இலங்கை சனத் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் முஸ்லிம் இனம் ஏற்பாடு செய்ய மறந்த அல்லது இன்னும் கருத்திற் கொள்ளாத ஒரு விடயம் பற்றி அனைவரினதும் கவனத்திற்கு கொண்டுவருவது இத்தருணம் பொறுத்தமானது.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடுமையான எதிர்புப் பிரசாரப் பேரலை என்றும் இல்லாதவாரு கடந்த ஏழு வருடங்களாக பேசப்பட்டுகிறது.இல்லை, முஸ்லிம்கள் இந்த நாட்டின் பங்காளிகள்தான் என்பதைச் சொல்ல பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறோம். அந்த வரிசையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக "ஓபன் மஸ்ஜித்" (Open Masjid) நிகழ்ச்சியினூடாக பள்ளிவாயல்கள் பயங்கரவாதத்தின் கேந்திர நிலையங்களாக தொழிற்பட்டு வருகின்றன என்ற கருத்தை முறையடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

443 வருடங்கள் இந்த நாடு ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தபோது விடுதலைக்காக ஓரினம் மட்டும் போராடவில்லை.இங்கு வாழ்ந்த மூவினங்களும் சேர்ந்தே போராடின என்ற நிலை தற்போது மறந்து ஏகபோக உரிமை கொண்டாடும் நிலை மாறிவருகின்றது.

பாடசாலை வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் கூட முஸ்லிம்கள் இந்த நாட்டின் அந்நியர்களின் ஆக்கிரப்புக்கு எதிராக போராடியது,செய்த சேவைகள் தொடர்பாக இருக்கின்றனவா என்று தேடிப்பார்த்தால்  அங்கும் சுதந்திரம் முடக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோனுகிறது.

நம் முன்னோர்கள் செய்த சேவைகள், அர்ப்பணிப்புகள் என்பன பல தனிப்பட்டவர்களாலும், சில நிறுவனங்களின் முன்னேடுப்புகளாலும் எழுத்து வடிவிலும் , ஒளி, புகைப்படங்கள், ஆவணங்களாகவும் அங்கும் இங்கும் முஸ்லிம் சமூகத்தின் பரம்பல், கட்சிகள் போன்று சிதறிக்கிடக்கின்றன.

இவற்றை ஓரிடத்துக்கு சேர்த்து, பாதுகாத்து இந்த நாட்டின் அடுத்த அனைத்து இன தலைமுறையினரின் வாசிப்புக்கும், பார்வைக்கும் கொண்டு செல்லும் பணியை ஒரு தனிமனிதனால் செய்வது என்பது சிரமமானது.

இந்தப் பணியை முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் அமைச்சு முறையாகத் திட்டமிட்டு அதற்குரிய வளாகத்தினுள்ளே  மேற்பார்வை செய்வது சாலச்சிறந்தது. எதிர்காலத்தில் வரலாறு பற்றிய ஆய்வின் மத்திய நிலையமாகவும் மாறும்.

இதனை அடுத்த வருடம் பெப்ரவரி 4ம் திகதி மக்கள் பார்வைக்கு கொண்டுவர காலதாமின்றி திட்டமிடுவதானது மிகப் பொருத்தமானது.

"வரலாற்றை இறைவன் மாற்ற மாட்டான்;
மனிதன் வரலாற்றை மாற்றிவிடுவான்" என்பதை நினைவில் வைத்து செயலாற்றுவோம்.

A Raheem Akbar
மடவளை பஸார்
2019/02/03
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here