புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் (15) புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் புத்தளம் கொழும்பு முகத்திடலில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது. 

புத்தளம், கரைத்தீவு, தில்லையடி, கற்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் வைத்தியசாலைகள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தை என்பன மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், மூவின மக்கள் ஒன்றினைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டனர். 

குப்பைக்கு எதிரான சுலோகங்களை ஏந்திக்கொண்டு 'கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம், ' உலகக் குப்பை எமக்கு வேண்டாம்' உட்பட பல கோஷங்களையும் எழுப்பிக்கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல சுலோகங்களையும் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் இருந்து புத்தளம் நகர சுற்றுவட்டம், தபால் நிலைய சுற்றுவட்டம் , பிரதான பஸ் நிலையம் ஊடாக மீண்டும் ஆரம்ப இடத்தை வந்தடைந்தனர். 





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.