இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியுள்ளது.


இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியை நியூஸிலாந்து அணி 80 ஓட்டங்களினாலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளினாலும் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையோயான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி எமில்டனில் இன்று ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி முதலில் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை குவித்தது.

213 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

இந்திய அணி சார்பில் தவான் 5 ஓட்டங்களையும், ரோகித் சர்மா 38 ஓட்டத்தையும், விஜய் சங்கர் 43 ஓட்டத்தையும், ரிஷாத் பந்த் 28 ஓட்டத்தையும், பாண்டியா 21 ஓட்டத்தையும், தோனி 2 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் குருனல் பாண்டியா 26 தினேஷ் கார்த்தக் 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்று அணியின் வெற்றிக்காக போராடினர்.

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை நியூஸிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு, கிண்ணத்தை கைப்பற்றியது.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் மிச்செல் சாண்டனர், டரல் மிச்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஸ்காட்கேலின், பிளேயர் டிக்னெர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.