தோட்டப்புற மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் சாகல


தோட்டப்புற மக்களின் பிரச்சனைகளுக்கு சமகால அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்கும் என்று துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 


இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த வீடமைப்பு நிர்மாணங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தம்மால் இயன்ற ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார். மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் பொதுமக்களின் கௌரவத்துக்குரியவர் என்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

மாத்தறை தெனியாய பிரதேசத்தில் அமைந்துள்ள செவலகந்த தோட்டத்தில் 50 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

தோட்டப்புற மக்களுக்கு மட்டுமல்லாது தென் பகுதியிலுள்ள தோட்டப்புற மக்களுக்கு தேவையான வீடமைப்பு வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 

காலி மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 200 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக சாகல ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here