கோக்கிலாய் பாலம் - மாற்று வீதியை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்


முல்லைதீவு கோக்கிலாய் புல்மோட்டை வீதியில் கோக்கிலாய் களப்பு ஊடாக கோக்கிலாய் பாலம் மற்றும் அதன் மாற்று வீதி அமைக்கப்டவுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


இதுதொடர்கான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

முல்லைதீவு கோக்கிலாய் புல்மோட்டை வீதியில் கோக்கிலாய் களப்பு ஊடாக கோக்கிலாய் பாலம் மற்றும் அதன் பிரவேச வீதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 25வது விடயம்)

கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணத்திற்கிடையில் கரையோரத்தில் தரையுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக முல்லைத்தீவு கோக்கிலாய் புல்மோட்டை வீதியை அபிவிருத்தி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோக்கிலாய் களப்பு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாலத்தின் மூலம் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டைக்கிடையில் சுமார் 100 கிலோ மீற்றர் தூரம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்திற்காக செக் குடியரசின் CSOB  வங்கியிடமும் உள்ளுர் வர்த்தக வங்கியிடமும் நிதி வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கமைவாக வங்கியுடன் கடன் இணக்கப்பாட்டு பேச்சுவார்தையை நடத்துவதற்கான நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here