இணையம் எங்கும் பரவலாக அடிபட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழக பகிடிவதை
வீடியோ மற்றும் கட்டுரைகளிற்குக் கீழே நீங்களெல்லாம் டைப் செய்த
"முஸ்லிம் மஜ்லிஸ் தேங்கா திருவுகின்றதா"
"பலாக்கா பறிக்கின்றதா"
"பொட்டைகளா"
போன்ற கேள்விகளின் மறுவருடிவம்தான் எனது தலைப்பு.

பகிடிவதை உபகலாச்சாரம் போன்ற விடயங்களைப் பேசுவதற்கு முதல் ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பினை ஏதோ ஒரு வகையில் தயவு செய்து புரிந்து கொள்ள முனையுங்கள்.
பகிடிவதை குற்றமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலங்காலமாக அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் தொடர்ந்து வருகின்ற ஒரு இடியப்ப சிக்கல் அது ஆனாலும் ஒவ்வொரு வருடமும் அதன் வீரியம் பன்மடங்காக குறைந்து வருகின்றது இன்னம் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பல பல்கலைக்கழகங்களிலும் ஒரு பத்து வருடத்திற்குள் அனைத்துப் பல்கலைக்கழகத்திலிருந்தும் முற்றாக துடைத்து எறியப்பட்டுவிடும்.

 நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலரும் அதற்கு உடந்தையாகத்தான் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைத் தவிர ஏனைய அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பெரும்பான்மை சிங்கள மாணவர்களாக அல்லது தமிழ் பேசும் ஏனைய மாணவர்களாகத்தான் இருப்பார்கள். Faculty எனும் ஒவ்வொரு பிரிவிலும் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம் மாணவர்கள் இருக்கிறார்கள். இப்படியான சூழலில்தான் முஸ்லிம் மஜ்லிஸ் இயங்குகின்றது. முஷ்லிம் மஜ்லிஸ் என்றால் தனியே அதற்காக இயங்கும் ஜம்மியத்துல் உலமா போன்ற கட்டமைப்பு கிடையாது.

முஸ்லிம் மாணவ மாணவியர்களில் இருந்து சிலர் நிருவாகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு மற்றையவர்களின் உதவியோடு இயங்கும் ஒரு volunteer அமைப்புத்தான்.
இதில் இயங்குபவர்கள் பல அர்ப்பணிப்புக்கள் மற்றும் தியாகங்களிற்கு மத்தியில் தான் இயங்குகிறார்கள், அது மொரட்டுவை முஸ்லிம் மஜ்லிசாயினும் சரி, கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசாயினும் சரி.

நீங்கள் பேஸ்புக்கில் குந்தியிருந்து "கெட்ட வார்த்தையில்" கொமண்ட் செய்வதை விடவெல்லாம் பன்மடங்கு பெரிய பொறுப்பு அது.
பல்கலைக்கழக வேலைகளில் வீடுகளிற்குக் கூட பல மாதங்களாக செல்லாவிட்டாலும் தங்கள் கடமைகளைச் செய்ய தம்மால் முடிந்த அளவிற்கு பிரயத்தனம் செய்வார்கள்.
என்னைப் பொருத்தவரை அனைத்து முஸ்லிம் மஜ்லிஸ்களை விடவும் கிழக்கு முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் பாவப்பட்டவர்கள்.

உங்களிற்குத் தெரிந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இருந்தால் விசாரித்துப் பாருங்கள். துவேசம் தலைவிரித்தாடும் ஆழ் கடல் அது. எத்தனையோ திறமையான மாணவர்கள் ஓரங்கட்டப்பட்டு ஓடவிடப்படும் தேசம் அது.
அப்படியான ஒரு இடத்திலிருந்து கொண்டு செயற்படுதல் என்பதெல்லாம் அவ்வளவு இலகுவானதொன்றல்ல.

இந்த முறை முஸ்லிம் மாணவர்கள் ரேகிங் படக்கூடாது என்பதற்தாக தங்களால் ஆன முயற்சிகளை கடும் பிரயனத்தனத்திற்கு மத்தியிலும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் செய்து முடித்துள்ளார்கள். நம்பிக்கை இல்லையென்றால் குறித்த பல்கலைக்கழக மாணவிகளிடமோ அல்லது மாணவர்களிடமோ விசாரித்துப் பாருங்கள்.

பல நாட்களாக பாதுகாத்து வந்தும் இறுதியாக "பbக்கட்டிங்" (பbக்கட்டிங்கை பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பகிடிவதையாகப் பார்ப்பது கிடையாது ஒரு கொண்டாட்டமாக கொண்டாடுவார்கள்) நடைபெறப்போகின்றது, இதிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என அவர்கள் முயற்சித்து கடைசி வரை உடனிருந்து வழியனுப்பி விட்டு திரும்பும் போதே குறித்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அதாவது நீங்கள் வீடியோவில் பார்க்கும் இடம் பெண் மாணவிகள் விடுதியிற்கு முன்னால் உள்ள வீதி. அது வரை கொண்டு வந்துவிட்டு திரும்பும் போதே இப்படி நடந்துள்ளது. அதுவும் முஸ்லிம் மாணவிகளை மாத்திரம் இலக்குவைத்து நடாத்தப்பட்ட ஒன்றல்ல.

சத்தம் கேட்டு விரயமாக வந்து மற்றைய பிள்ளைகளை வேறு வழியால் கொண்டு சென்று விட்டு விட்டுத்தான் அவர்கள் சென்றுள்ளார்கள்.
இதுவெல்லாம் நான் எழுதுவதற்கோ நீங்கள் வாசிப்பதற்கோ இலகுவாக இருந்தாலும் நடைமுறையில் பெரும் சிக்கல் வாய்ந்தது. "அது என்ன முஸ்லிம் பிள்ளைகளை மாத்திரம் காப்பாத்துர" போன்ற கேள்விகள் வந்து நிற்கும். அதையெல்லாம் தாண்டி செயற்பட்ட அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.

இத்தோடு, "ரேகிங் நடக்கும் போது முஸ்லிம் பிள்ளைகளை மட்டும் பிரித்து எடுத்துச் செல்வது அநியாயம், சோசியல் ஆக விடுவதில்லை" என ஒரு பல்கலைக்கழக மாணவி பதிவிட்டுள்ளார்.

"மாணவிகளை காப்பாத்த நீங்கள் யார், அவர்களின் ஒழுக்கத்தை காப்பாற்ற நீங்கள் யார். சுதந்திரமாக விடுங்கள்' எனவும் "புத்திஜீவிகள்" கருத்துப் பகிர்கிறார்கள்
இவர்களிற்கும் பதில் சொல்லிவிட்டு
என்ன புடுங்குகிறீர்களா எனக் கேட்கும் உங்களிற்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கின்றது.
கிழக்குப் பல்கலைக்கழக மற்றும் ஏனை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ மாணவியர்கள் உங்கள் முஸ்லிம் மஜ்லிசினையும் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசினையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் 'விளங்காத மாடுகள்" ஒரு நாள் ஓய்ந்துவிடும்.

ஆதில்
பல்கலைக்கழக மாணவன்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.