" மனிதர்களைக் கொலை செய்ய நான் உன்னைப் போல முஸ்லிம் கிடையாது "


"காஷ்மீரில் 44 இந்திய ராணுவத்தினர் தீவிரவாதியின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்குப் பலியான செய்தி மதுரையில் ஒரு இஸ்லாமியருக்குச் சொந்தமான ஹோட்டலில் போய்க் கொண்டிருந்த போது அங்கே சாப்பிட வந்து இருந்த வாடிக்கையாளர்களில் பலர் " என்ன  பாய், குண்டு ஏதும் வச்சிற மாட்டியே, உங்காளுங்கள பார்த்தீங்களா என்ன வேலை பாக்குறானுங்க.." என்று கிண்டல் செய்ய அந்த ஆள்  " ஹீ " என்று சிரித்து சமாளித்துக் கொண்டு இருந்தார்." என்று நண்பர் ஒருவர் பதிவு எழுதி இருந்தார்...

" மனிதர்களைக் கொலை செய்ய நான் உன்னைப் போல முஸ்லிம் கிடையாது " என்று தன்னோடு நெருங்கிப் பழகிய நண்பரே சொன்னதாக பஞ்சாப்பில் LPU university இல் படிக்கும் இலங்கை அன்பர் அம்ஜத் சொன்ன போது இப்போதைய டென்ஷனும் அவநம்பிக்கையும் மிக்க சூழலை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது..முழு யுனிவர்சிட்டியிலும் போர்க் கோஷங்களும் பாகிஸ்தான் எதிர்ப்பு கூச்சலுமாய் இருக்கிறதாம்.

இரண்டு நாடுகளின் நிலமோகத்தால் சீரழிந்து போய் ரத்தமும் பனியும் உறைந்து போன காஷ்மீர் மாநிலத்தின் எழுபத்திரண்டு வருட அரசியலின் துயர வரலாறு தீர்வின்றித் தொடர அங்கே நடக்கும் அசாம்பாவிதங்களை இந்தியா எங்கும் பதட்டமாகவும் படபடப்பாகவும் மாற்றி சம்பந்தமே இல்லாத தரப்புக்கள் மேல் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன ஆர்.எஸ் எஸ் உட்பட சில தீவிரவாத அமைப்புக்கள்.விளைவு குண்டு வைத்த கூட்டம் கூண்டோடு பிடிபட்டாலும் வெவ்வேறு மொழி, கலாச்சாரப் பாரம்பரியங்களுடன் 29 மாநிலங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் வெடிகுண்டை வெடிக்க செய்தவனின் சமூகத்தைச் சேர்ந்த அப்பாவிகள் குற்றம் செய்த வீட்டு நாய் மாதிரி தலை குனிந்து நிற்க வேண்டி இருக்கிறது..ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு கண்டனம் செய்ய வேண்டி இருக்கிறது...என்ன ஒரு கேவலம் இது..

இதே  இந்திய ஒழுக்கமிக்க ராணுவம் 1987 -1990 காலப்பகுதியில் இலங்கையின் வட மாகாணத்தில் ஆடிய கோர வேட்டைக்கு இப்போது வரை யார் மன்னிப்புக் கேட்டார்கள்..காஷ்மீரில் ராணுவம் மேற்கொள்ளும் கற்பழிப்புகளுக்கும் படுகொலைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் எந்த இந்துவவாது வெட்கப்பட்டு " நான் செய்யவில்லை.இந்தப் படு பாதகங்களை நான் கண்டிக்கிறேன்" என்று இஸ்லாமியரிடம் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறாரா ?
ஆசிபாக்கள் மதப் பைத்தியங்களால் சீரழிக்கப்படும் போது, ஹரியானாவைச் சேர்ந்த சிறுவன் ஜுனைத் மாட்டுக் கறி வைத்திருந்ததாய் கூறி மாட்டு மூளைக் கும்பலால் புனித நோன்பு தினத்தில் பதை பதைக்கக் கொல்லப்பட்ட போது யாராவது வெட்கித் தலை குனிந்தார்களா ?

யாரோ செய்த செயலுக்கு நாம் ஏன் பொறுப்பு எடுக்க வேண்டும் ?என்று அத்தனை பேரும் படுமெத்தனமாய் இருக்கிறார்கள்..அதை எல்லாம் விடுங்கள்.1984 இல் பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்ப்பாதுகாவலராய் இருந்த சீக்கியரால் கொலை செய்யப்பட்டதிற்கு எதிர்வினையாகப் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.இதைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த மகனார் ராஜீவ் காந்தி " ஆல மரம் விழுந்தால் புற்கள் சாகுவது தானே" என்றார்.2002 இல் குஜராத்தில் இரண்டாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி ஒரு பேட்டியில் மோடி " வாகனத்தில் போகும் போது நாய் குறுக்கே வந்தால் என்ன செய்வது ? " என்று கேட்டார்...கொடூரத்தின் பிதாமகனே அடித்தான் பாரு சிக்ஸர்...

1981 இல் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்திற்காக "நானோ சிங்கள மக்களோ மன்னிப்புக் கேட்கத் தேவை இல்லை" என்று சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்தார் சம்பிக்க ரணவக்க....ஆக சரித்திரம் போதிக்கும் போதனை இது தான்..எவனாவது ஒருத்தனோ ஒரு குழுவோ செய்யும் அட்டகாசங்களுக்கு இங்கே அந்த கொடூரங்களை நிகழ்த்திய அதிகாரங்களும் சரி அதன் வழி வந்த தலைமைகளும் சரி அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்களும் சரி மூடிக் கொண்டு இருக்கிறார்கள்..யாரும் தன்னை நிரூபிக்க முனைவதில்லை..இந்த நிகழ்வுகள் எமக்கும் ஒரு பாடம்..யார் யாரோ செய்யும் தீவிரவாதத்திற்கு நாம் எட்டாய் மடிந்து இளித்து வழியத் தேவை இல்லை..
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here