சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர் லத்தீபினுடைய சேவை காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்கும் தீர்மானம்

இன்றுடன் ஓய்வு பெற இருந்த பொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர் லத்தீபினுடைய சேவை காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

40 வருடமாக இத்துறையில் கடமையாற்றியுள்ள அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இந்நாட்டின் 11 ஆவது பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். 

இவரது தலைமையின் கீழ் கடந்த 6 மாதங்களில் 798 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பல்வேறு பாதாள குழு நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here