தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில குசல் பெரேராவின் நிதான மற்றும் அதிரடி ஆட்டம் காரணாக இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

தென்னாபிரிக்க - இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 13 ஆம் திகதி டர்பனில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு தென்னாபிரிக்க அணியை பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. 

இதனால் 44 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி நேற்றைய போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம நேர முடிவில் தென்னாபிரிக்க அணி 124 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இதையடுத்து போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று ஆரம்பிக்க தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.


இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 304 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 304 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கை அணி நேற்றைய மூன்றம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

லஹிறு திரிமன்ன 21 ஓட்டத்துடனும், திமுத் கருணாரத்ன 20 ஓட்டத்துடனும் குசல் மெண்டீஸ் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்து வெளியேற, ஒசத பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்றைய தினம் ஆரம்பிக்க இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தன. அதன்படி ஒசத பெர்னாண்டோ 37 ஓட்டத்துடனும், நிரோஷன் திக்வெல்ல  டக்கவுட் முறையிலும், தனஞ்சய டிசில்வா 48 ஓட்டத்துடனும், சுரங்க லக்மால் டக்கவுட் முறையிலும் லஷித் எம்புலுதெனிய 4 ஓட்டத்துடனும், கசுன் ராஜித ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆடுகளத்தில் குசல் பெரேரா நின்று நிதானமாகவும், அவ்வப்போது அதிரடியாகவும் நிலைத்தாட இவருக்கு ஏனைய வீரர்கள் தோள் கொடுத்தாடாதமையினால் இலங்கை அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.



எனினும் இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கிய விஷ்வ பெர்னாண்டோ தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க மறுமுணையில் வன் மேன் ஆர்மியாக போராடிய குசல் பெரேரா 85.3 ஆவது ஓவரில் தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைத்து நொருக்கினார். 

போட்டியில் இறுதித் தருணத்தில் அதிரடி காட்டிய குசல் பெரேரா ஐந்து 6 ஓட்டம், 12 நான்கு ஓட்டம் அடங்களாக ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களை குவித்ததுடன், மறுமுணையில் விஷ்வ பெர்னாண்டோ 6 ஆட்டமிழக்காது 6 ஓட்டம் எடுத்தார்.

பந்து வீச்சில் மஹாராஜ் 3 விக்கெட்டுக்களையும், ஒலிவர்,ஸ்டெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், பிலேண்டர், ரபடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியை வெற்றி கொண்ட 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
(நன்றி வீரகேசரி)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.