நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் நாளை(11) முதல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.  (மு)
டெய்லி ஸிலோன் 

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here