இயக்க சக்தியில் இயங்கும் வாள்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை நாளை முதல்


பாவனையிலுள்ள இயக்க சக்தியில் இயங்கும் சகல வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை நாளை (20) முதல் ஆரம்பமாவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, அரச, தனியார் பிரிவில் நிறுவன ரீதியாகவும், தனிப்பட்டவர்களின் பயன்பாட்டுக்காகவும் வைத்துள்ள இயங்கு சக்தியில் செயற்படும் சகல வாள்களையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய நடவடிக்கையினால், சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் காடழிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், பதிவு செய்பவர்களுக்கு அனுமதிப் பத்திரம் ஒன்றும், இலக்கத் தகடு ஒன்றும் வழங்கப்படும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here