'த யங் பிரன்ட்ஸ்' இனால் ஏற்பாடு செய்யப்பட்ட வழிகாட்டல் கருத்தரங்கு

கல்வியியற் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு,இம்மாதம் 15ம் திகதி முடிவடையும் நிலையில் விண்ணப்பித்தல் தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (2019/02/09) சனிக்கிழமை கண்டி பதியுதீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியில் 'த  யங் பிரன்ஸ்' (The young Friends) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது.

2016/2017ம் ஆண்டுகளில் உயர்தரம் கற்ற மாணவ,மாணவிகளே விண்ணப்பிக்கும் தகுதியுடையவர்கள். வர்த்தமானி அறிவித்தலின் படி எவ்வாறு விண்ணப்பத்தில், எந்த கற்கைநெறிகளுக்காக விண்ணப்பித்தல், விண்ணப்பிக்கும் முறை, இணைத்துக் கொள்வதற்கான தகைமைகள் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட வழிகாட்டல், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இம்முறை விண்ணப்பத்திற்காக முதன் முறையாக இணையவழி (Online) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இநத இணைப்பை அழுத்துவதினூடாலக விண்ணப்பிக்கலாம் www.ncoeadmissionmoe.net  இணைவழியில் விண்ணப்பிக்கையில் பிரச்சினைகள் ஏற்படுத்துத்து அது தொடர்பாக இணையத் தளத்தில் உள்ள மின்னஞல் (Email) ஊடாக முறைப்பாடு செய்யலாம்.மேலும்,தபால் மூலமும் விண்ணப்பிக்கவும் முடியும்.மொத்தமாக 32 பாடங்களுக்காக பயிலுனர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வின் வளவாளராக அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம் நியாஸ் கலந்து சிறப்பித்தார்.
A Raheem Akbar
மடவளை பஸார்
2019/03/09
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here