( ஐ. ஏ. காதிர் கான் )

   பாடசாலை பாட விதானத்தில் சட்டத்தை ஒரு பாடமாகச்  சேர்த்துக் கொள்வதற்கான அமைச்சரவைப்  பத்திரமொன்றை,  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள சமர்ப்பித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் பலர் பாடசாலைக்குச்  செல்லாதவர்கள்.  அத்துடன், மேலும்  சிலர் நாடடின் சட்டங்களைப் பற்றித்  தெரியாதவர்கள். இதன் காரணமாகவே,  அவர்கள் சிறை செல்ல நேருகிறது. இந்த நிலையில், இந்த அமைச்சரவைப்  பத்திரத்தைச்  சமர்ப்பித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 
  கஹவத்தையில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 
   மரண தண்டனையை அமுல் செய்வது பற்றி பேசப்பட்டு வந்த போதிலும்,  1976 ஆம் ஆண்டுக்குப்  பின்னர் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. இறுதியாக 1976 இல் சந்திரபால என்பவரே மரண தண்டனைக்கு ஆளானவர். 
   மரண தண்டனையை நீக்குவதான சர்வதேச உடன்படிக்கையொன்றில்,  இலங்கையும் கைச்சாத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அமைச்சர் தலதா அத்துக்கோறள இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.