பொரளை விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உட்பட ஐவர் கைது


கொழும்பு - பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த டிபெண்டர் வாகனம் நேற்று பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், குறித்த வாகனத்தின் ஓட்டுனரும் உரிமையாளரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 

சி.சி.ரி.வி காணொளிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஊடாக பெலவத்தை, பெகோட பூங்காவில் இருந்து குறித்த டிபென்டர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 

மாலபோ தலங்கம பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நவிது ஒமோஷ் என்ற நபரே வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் WP.FZ 9143 என்ற டிபென்டர் வாகனத்தின் உரிமையாரான கொழும்பு 3, காலி வீதியை சேர்ந்த விசித ஶ்ரீ விஜேசேகர என்ற 27 வயதுடைய இளைஞனும் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணந்துள்ளார். 

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த டிபென்டர் வாகனத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதில் பயணித்ததாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அத்துடன் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் டிபென்டர் வாகனத்துடன் பயணித்த பிராடோ வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் நேற்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த பிராடோ வாகனத்தை தம்மிக ஆடிகல எனும் பிரபல தொழில் அதிபரின் மகனான 28 வயதுடைய துமிந்த சுதம்மிக ஆடிகல என்பவரே ஓட்டிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் உட்பட மூவர் குறித்த பிராடோ வாகனத்தில் பயணித்துள்ளதுடன் அதில் பெபிலியான பகுதியை சேர்ந்த 23 வயதுடைய கிரன் மெத்திவ் தனிஸ் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட ஐவரையும் இன்று (25) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (24) அதிகாலை 4.35 மணியளவில் கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றிருந்தது. 

விபத்தில் பலத்த காயமடைந்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here