காங்கேசன்துறை துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், மீள் குடியேற்ற மற்றும் புனருத்தாபனம், வட மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த விடயம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கே அவ்வாறு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தினை வர்த்தக துறைமுகமாக விருத்தி செய்வதன் மூலம், இலங்கையினை இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு கிடைக்கின்ற உத்வேகம் மற்றும் அவ்வாறு குறித்த துறைமுகத்தினை வர்த்தக துறைமுகமாக மாற்றுவதன் மூலம் வட மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்குரிய பங்களிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், அத்துறைமுக அபிவிருத்தி செயன்முறைக்காக காணிகளை பெற்றுக் கொள்ளல், அடிப்படை வசதிகள் மற்றும் ஏனைய பயன்பாட்டு வசதிகளை வழங்குவதற்கு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு சரி நிகராக சமய மற்றும் சமூக அபிவிருத்திகளை ஏற்படுத்துவதற்காக அப்பிரதேசத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவிலை மறுசீரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.