பாக்கிஸ்தானில் இடம்பெறும் பயிற்சியில் பங்கேற்க 'சயுரல' பயணம்


பாக்கிஸ்தான் கடற்படையினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்கின்ற 'அமான் 2019' கடற்படை பயிற்சியில் கலந்து கொள்வதற்காக பாக்கிஸ்தான் நோக்கி இலங்கை கடற்படை கப்பல் சயுரல
நேற்யை தினம் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந் நிகழ்வுக்காக கடற்படை துணை தலைமை பணியாளர் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல ஆகியோரும் கலந்துகொன்டனர். 

அங்கு சிரேஷ்ட அதிகாரிகளினால் கப்பலின் கட்டளை அதிகாரி (நீர் முழ்கி) இசிர காசிவத்த உட்பட கப்பலின் அனைத்து விரர்களுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

28 கடற்படை அதிகாரிகள் மற்றும் 142 கடற்படை சிப்பந்திகள் உட்பட 170 பேர் பயணிக்கும் குறித்த கப்பல் இம் மாதம் 07ஆம் திகதி பாக்கிஸ்தானில் கராச்சியில் சென்றடைய உள்ளது.

குறித்த கூட்டு கடற்படை பயிற்சி 2019 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன் இந்த கடற்படை பயிற்சி மூலம் தகவல் பகிர்வு, இடைக்கால புரிந்துணர்வு மற்றும் பங்கேற்பு, கப்பலில் பொதுவான தேவைகளை அடையாளம் காணல், கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள், பயங்கரவாத எதிரான நடவடிக்கைகள், தேடல்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவி, உட்பட பல கடல்சார் கடற்படை நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. இவ்வாரு பயிற்சிகள் மூலம் வெளிநாட்டு கடற்படைகளிடையில் உறவுகளை மேம்படுத்த முடிகின்றதுடன் எங்கள் கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை பராமரிக்கவும் மிகப் பெரிய ஆதரவாக உள்ளது.

இவ்வருடம் நடைபெற உள்ள இப்பயிற்சியில் அவுதிரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேஷியா, மாலைதீவு, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், கட்டார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உட்பட 44 நாடுகளை சேர்ந்த கடற்படை கப்பல்கள் மற்றும் பல விமானங்கள் ஆகியன கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here