பால்மா சர்ச்சை தொடர்பில் இன்று ஐ.நா சபையின் இலங்கைக் கிளைக்கு மகஜர்  கையளிக்க உள்ளதாக, மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான மன்றம் அறிவித்துள்ளது.  

பால்மாக்களின் தரம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அமைச்சர்கள் பொறுப்பின்றி கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.சுமார் இரண்டு கோடி மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேசிய உணவுக் கொள்கையொன்று இல்லாது உள்ளது.   

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையை அறிவூட்டுவதற்காக மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு, ஏனைய சிவில் அமைப்புகளுடன் இணைந்து இன்று (25) மகஜரொன்றை கையளிக்க இருப்பதாக மேற்படி மன்றம் அறிவித்துள்ளது.  

பால்மாக்களின் தரத்தை சுயாதீனமாகவும் துல்லியமாகவும் அறிவதற்காக உள் நாட்டிலுள்ள பால்மா மாதிரிகள் கொழும்பு கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிகளை வழங்குமாறு குறித்த நிறுவனத்தை கோரியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு மற்றும் நச்சுப் பொருட்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப் பட்டது.இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி அமைப்பு ஐ.நாவிடம் முறையிட நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.