துரித நகர விரிவுபடுத்தலை வேண்டி நிற்கும் மடவளை நகர்நகரத் திட்டமிடல், நீர் வழங்கள் வடிகாலமைப்பு, உயர் கல்வி அமைச்சர் கெளரவ ரவூப் ஹகீம் அவர்களின் ஆழ்ந்த கவனத்திற்கு...

மடவளை,கண்டி மாத்தளை பிரதான வீதியில் அமையப் பெற்றிருக்கும் அதிக மக்கள் வருகை தரும் ஒரு வியாபாரம் நகரம்.பதினைந்துக்கு மேற்பட்ட ஊர்களுக்கான பஸ் சேவைகளுடன் பல் ஆயிரக்கனக்கான வாகனங்களும் நாளாந்தம் ஊடறுத்துச் செல்கிறது. பல்வேறுபட்ட தேவைகளுக்காக நகருக்குள் வாகனங்கள் வந்து செல்கின்றன. இரண்டு பிரதான 'ரவண்ட்எபவ்ட்' (Roundabout) கொண்டுள்ளது.A9 வீதியின் ஏக மாற்று வழியாக மடவளை நகர் அமையப் பெற்றுள்ளது.

நகருக்குள் வந்து செல்கின்ற மக்கள் புழக்கத்துக்கும் வாகனங்களின் தொகைக்கும் ஏற்ப நகரின் பாதையும், நகரமும் பல வருடங்களாக விஸ்தரிப்பு செய்யப்படாத நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள், பாதசாரிகள், நகருக்குள் வரும் வாகனங்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றதை காணக் கிடைக்கிறது.

பாதை எவ்வாறான விஸ்தரிப்பை வேண்டி நிற்கிறது என்று சிந்தித்தால், இரு ஓரங்களிலும் பொருள்கள் ஏற்றி இறக்கவும், கொள்வனவு செய்பவர்களுக்கும், வேறு தேவைகளுக்காக நகருக்குள் வருகின்ற வாகனங்களை தரித்து திருத்தி தமது தேவைகளை பூர்த்தி செய்யுமளவுக்கு காணப்பட வேண்டும். பாதசாரிகள் செல்வதற்கான பிரத்தியேக வழியும்(Pedestrian way),வாகனப் போக்குவரத்திற்கு இடையூறற் விதமாக பஸ்தரிப்பு நிலையங்கள் (Bus halt),முச்சக்கர வண்டிகள்
(Trishaw stand), கூலி லொறி(Hire Lorry park), கூலி வாகனங்கள் (Hire vans) தரிப்பிட வசதிகள் கொண்ட முறையான பாதை விஸ்தரிப்புக்கு நகர் உட்படுமாயின் பல கட்டிடங்கள் பகுதியளவும்,சிலவை முழுமையாக இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பாதை விஸ்தரிப்புக்கு மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாதை விஸ்தரிப்பு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பாதை விஸ்தரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் சம காலத்தின் அவசியம், எதிர் காலத்தின் தேவைப்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது போதாமையுள்ளது. அவ்வாறு பாதை விஸ்தரிக்கப்பட்டாலும் நெருக்கடிகள் பாரிய அளவு குறைவடையும் என எதிர்பார்க்க முடியாது.தற்போதுள்ள அதே சிக்கல் நிலை தொடரும்.

மேற் சொன்ன விதமாக அங்க சம்பூரணமான பாதை விஸ்தரிப்பு அசாத்தியமானது. இதனால் மக்கள் பல அசெளகரியங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் உட்பட வாய்ப்புள்ளன. இதனை தவிர்க்கும் விதமான நகரத்திட்டமிடல் காலத்தின் தேவை என்பதை குறித்த அமைச்சின் அமைச்சர் என்ற வகையில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இதற்காக,நகர மத்தியிலிருந்து சற்று புறம்பாக வாகனத்தரிப்பிட வசதி கொண்ட கட்டிடத் தொகுதி ஒன்றை அமைப்பது ஒரு தீர்வாகும். நகருக்குள் வரும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வாடிக்கையாளர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய இலகுவாகும். அதே போன்று நகருக்குள் இருக்கும் முச்சக்கர வண்டிகள், கூலி வேன்கள், லொறி என்பனவும் அவற்றில் தரித்து வைக்க முடியும். இது நகரின் நெருக்கடி, விபத்துக்கள் மற்றும் பாதசாரிகள் பாதையில் நடப்பதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

அக்கட்டிடத் தொகுதியில், மாமிசக் கடைகள் (Meat Stalls) மரக்கறிக் கடைகள் (Vegetable Stalls) அமையப் பெறுவதால் பாதையோரங்களில் விற்கப்படும் நிலையை தவிர்க்கப்ப்டும்.ஆரோக்கியமான உணவுக் கொள்வனவுக்கு உதவியாக அமையும். ஏனைய சிறிய கடைத் தொகுதிகள் அமையப் பெறுவதும் நகருக்குள் வந்து செல்கின்ற வாடிக்கையாளர்களை அதிகரிக்க வாய்ப்பாகவும் அமையும்.

முற்கோடிட்டு காட்டப்படவைகளே இவை. களத்திலிருந்து நேரடியாக பார்வையிடும் போது முக்கியத்துவத்தை உணர முடியும்.

இத்தகைய செயற்றிட்டத்தை துரிதப்படுத்துவதினூடாக பாதுகாப்பான நகர், மக்கள் சூழல் உருவாகும்.


A Raheem Akbar
2019/02/14
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here